டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி போராட்டத்தில் கலவரம்.. ஜாமியா மிலியா பல்கலை. மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. பரபரப்பு!

டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி உள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி உள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மாபெரும் போராட்டம் எழுந்துள்ளது. அங்கு சாலைகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Citizenship Amendment: Police did lathi charge on students of Jamia Millia Islamia University

இந்த போராட்டம் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் அசாமில்தான் இந்த போராட்டம் அதிகமாக நடந்து வருகிறது. தற்போது டெல்லியிலும் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கு இருக்கும் மாணவிகள் மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி உள்ளனர். லத்திகளை கொண்டு அங்கிருந்த மாணவர்களை மோசமாக தாக்கியுள்ளனர். பெண் மாணவிகள் பலரும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில் சில மாணவிகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். அதேபோல் வானத்தை நோக்கியும் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.இந்த மாணவர்கள் போராட்டத்தில் கலவரம் செய்ததால்தான் தாக்குதல் நடத்தினோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் போலீசார்தான் கலவரத்தை ஏற்படுத்தினார்கள் என்று மாணவர்கள் கூறி உள்ளனர்.

English summary
Citizenship Amendment Bill: Police did lathi charge on students of Jamia Millia Islamia University.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X