டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர்கள் கற்களால் தாக்கினார்கள்.. அதனால் உள்ளே சென்றோம்.. டெல்லி போலீஸ் ஷாக் விளக்கம்!

ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் அடைந்தனர் என்று டெல்லி தெற்கு கிழக்கு பகுதி போலீசார் டிசிபி சின்மோயி பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் அடைந்தனர் என்று டெல்லி தெற்கு கிழக்கு பகுதி போலீசார் டிசிபி சின்மோயி பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடக்கும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் கடுமையாக காயம் அடைந்தனர்.

குடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு! குடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு!

என்ன போராட்டம்

என்ன போராட்டம்

இது தொடர்பாக டெல்லி தெற்கு கிழக்கு பகுதி போலீசார் டிசிபி சின்மோயி பிஸ்வால் அளித்த பேட்டியில், மாணவர்கள் போராட்டத்தின் போது ஒரு கும்பல்தான் இந்த கலவரத்தை மேற்கொண்டது. அவர்கள்தான் பேருந்து சைக்கிளுக்கு எல்லாம் தீ வைத்தது. அவர்கள்தான் எங்கள் மீது கற்களாய் வீசி தாக்கியது. எங்களுக்கு மாணவர்கள் உடன் பிரச்சனை கிடையாது.

நோக்கம்

நோக்கம்

எங்களின் ஒரே நோக்கம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அங்கிருந்த கலவரக்காரர்களை அடக்க வேண்டும். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்தோம், மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் அடைந்தனர்.

என்ன வளாகம்

என்ன வளாகம்

இந்த பல்கலைக்கழக வளாகம் ஒன்றாக இல்லை. இந்த வளாகம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. சாலையின் இரண்டு பக்கமும் இது அமைந்துள்ளது. நாங்கள் அங்கிருந்த கலவரக்காரர்களை திருப்பி அனுப்பிக் கொண்டு இருந்தோம். ஆனால் அவர்கள் உள்ளே செல்லவில்லை.

கற்களை வீசி தாக்குதல்

கற்களை வீசி தாக்குதல்

அவர்கள் எங்கள் மீது கற்களை வீசி எறிந்தார்கள். போலீசாரை கடுமையாக தாக்கினார்கள். அவர்கள் உள்ளே சென்ற பின்பும் எங்கள் மீது கற்களால் தாக்கினார்கள்.

கைது செய்தோம்

கைது செய்தோம்

இதில் சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம். அது குறித்து இப்போது இப்போது சொல்ல முடியாது. பின்பும் விளக்க அளிக்கிறோம். நாங்கள் யார் மீதும் துப்பாக்கி சூடு நடத்தவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

English summary
Citizenship Amendment: Students did stone-pelting on us says Chinmoy Biswal, DCP South East.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X