டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துப்பாக்கியை தூக்கிய போலீஸ்.. கைகளை உயர்த்தியபடியே சரண்டர் ஆன மாணவர்கள்.. ஷாக்கிங் வீடியோ!

டெல்லியில் நேற்று நடந்த போராட்டத்தில் மாணவர்கள் கைகளை உயர்த்தியபடியே போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi students surrendered to police by raising their hands during the protest yesterday

    டெல்லி: டெல்லியில் நேற்று நடந்த போராட்டத்தில் மாணவர்கள் கைகளை உயர்த்தியபடியே போலீசாரிடம் சரண் அடைந்தனர். இந்த வீடியோ இணையம் முழுக்க வெளியாகி வைரலாகி உள்ளது.

    குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக நாடு மொத்தமும் போர்க்களமாக மாறியுள்ளது. முக்கியமாக டெல்லியில் நேற்று மாலையில் இருந்து தற்போது வரை மாபெரும் கலவரமும் போராட்டமும் நடந்து வருகிறது.

    அசாமில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லியில் நேற்று ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் நேற்று பெரிய கலவரமாக மாறியது.

    மாணவர்கள் போராட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் ஒரு போட்டோ.. உலக அளவில் வைரல்.. என்ன சிறப்பு? மாணவர்கள் போராட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் ஒரு போட்டோ.. உலக அளவில் வைரல்.. என்ன சிறப்பு?

    மாணவர்கள் எப்படி

    மாணவர்கள் எப்படி

    இந்த போராட்டத்தில் நேற்று போலீசார் மாணவர்கள் பலரை கைது செய்தனர். போலீஸ் நடத்திய தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். சிலரை இரண்டு, மூன்று போலீசார் ஒன்றாக சேர்ந்து குண்டு கட்டாக் தூக்கி சென்றனர்.

    அமைதியான போராட்டம்

    அமைதியான போராட்டம்

    இந்த போராட்டத்தில் மொத்தம் 112 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு முழுக்க இவர்கள் போலீஸ் காவலில் இருந்தனர். இன்று காலை இவர்கள் விடுவிக்கப்பட்டனர். கை, கால்கள் உடைந்த நிலையில் இவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    சரண்டர்

    சரண்டர்

    இந்த நிலையில் டெல்லியில் நேற்று ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் செய்த போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். வானத்தை நோக்கி போலீசார் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்தனர்.

    எப்படி காயம்

    அதோடு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள். இதனால் தங்கள் கைகளை உயர்த்தியபடியே போலீசாரிடம் மாணவர்கள் பலர் சரண் அடைந்தனர். எங்கள் கைகளில் எதுவும் இல்லை. அதனால் நாங்கள் சரண் அடைகிறோம்.

    அமைதி போராட்டம்

    அமைதி போராட்டம்

    நாங்கள் அமைதியாக போராடி வருகிறோம். அதனால் எங்களை சுட வேண்டாம் என்று மாணவர்கள் தெரிவித்தனர். இந்த மாணவர்கள் எல்லோரும் போலீஸ் மூலம் பின் அப்புறப்படுத்தப்பட்டனர். மாணவர்கள் சரண்டர் ஆகும் இந்த வீடியோ தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

    English summary
    Citizenship Amendment: Students surrendered to police by raising their hands during the protest yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X