டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதச்சார்பின்மை, தேசியவாதம், குடியுரிமை உள்ளிட்ட பாடங்களை அதிரடியாக நீக்கியது சிபிஎஸ்இ

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தின் கீழ் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான புத்தகங்களில் மதச்சார்பின்மை தேசியவாதம், குடியுரிமை உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.

கொரோனா லாக்டவுனை முன்வைத்து பாடத் திட்டங்கள் குறைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்தது. இதனடிப்படையில் தற்போது பாடங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை பாடங்களான மதச்சார்பின்மை, குடியுரிமை, கூட்டாட்சி போன்ற பல பாடங்கள் நீக்கப்பட்டிருப்பதுதான் சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சிபிஎஸ்இ-ன் இந்த நடவடிக்கைக்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆன்லைன் வகுப்புகள் ஓகேதான்.. இத்தனை சவால்கள் இருக்கே.. அரசு இதை கவனத்தில் கொண்டால் நல்லாருக்கும்! ஆன்லைன் வகுப்புகள் ஓகேதான்.. இத்தனை சவால்கள் இருக்கே.. அரசு இதை கவனத்தில் கொண்டால் நல்லாருக்கும்!

சி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைப்பு

சி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைப்பு

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வித் துறையும் முடங்கி உள்ளதால், நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு குறைப்பதற்கு மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்திருக்கிறது. இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் செய்தி வெளியிட்டார். மேலும் சி.பி.எஸ்.இ. இயக்குநரும் 2020-21 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டம் குறைப்புத் தொடர்பாக சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதாகக் கூறி உள்ளார்.

நீக்கப்பட்ட அத்தியாயங்கள்

நீக்கப்பட்ட அத்தியாயங்கள்

சி.பி.எஸ்.இ. 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (Political Science) பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி (Federalism), குடியுரிமை (Citizenship), தேசியம் (Nationalism), மற்றும் மதச் சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன. மேலும், "உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும்? (Why do we need Local Governments?), இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி (Growth of Local Government in India)" ஆகிய அத்தியாயங்களையும் நீக்கி உள்ளது. பாடத் திட்டம் குறைப்பு எனும் பெயரில் பா.ஜ.க. அரசு திட்டமிட்டு மேற்கண்ட பாடங்களை நீக்கி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

நீக்கியதில் உள்நோக்கம்

நீக்கியதில் உள்நோக்கம்

கொரோனா பொது முடக்கத்தைக் கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட்டதில் மத்திய பா.ஜ.க. அரசின் உள்நோக்கம் அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. பா.ஜ.க. தங்களது சொந்த விருப்பங்களைத் திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெற்றிருக்கும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டை நீக்க வேண்டும் என்று நீண்டகாலமாகவே இந்துத்துவ சனாதன சக்திகள் கோரி வருகின்றன. கடந்த 2014 இல் அதற்கான முயற்சிகளில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

மதச்சார்பின்மைக்கு எதிரான பாசிசம்

மதச்சார்பின்மைக்கு எதிரான பாசிசம்

தற்போது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே கல்வி என்கின்ற சனாதன சித்தாந்தத்தைச் செயல்படுத்த பா.ஜ.க. அரசு தீவிரமாக இருக்கிறது. இந்நிலையில்தான் பாடத்திட்டத்தில்கூட ‘மதச் சார்பின்மை' என்ற வார்த்தையே இடம் பெறக் கூடாது என்ற பாசிச சிந்தனை பா.ஜ.க. அரசுக்கு வந்திருக்கிறது. அனைத்து அதிகாரங்களையும் டெல்லியில் குவித்து வைத்துக் கொண்டு ‘ஒற்றையாட்சி' எதேச்சதிகார ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வகையில் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது. மாணவர்களின் நெஞ்சத்திலும், நஞ்சு கலக்கும் வகையில் கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம் போன்ற பாடங்களை நீக்கி இருக்கிறது.

அபாய கட்டத்தில் மக்களாட்சி

அபாய கட்டத்தில் மக்களாட்சி

இந்தியாவில் மக்களாட்சி அபாயகட்டத்தை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு இவை எல்லாம் சான்றுகளாகும். பல்வேறு தேசிய இனங்களின் அடையாளங்களைத் திட்டமிட்டு அழித்தால் இந்தியா எனும் அமைப்பே கேள்விக்குறியாகிவிடும். கல்வியாளர்கள் கொண்ட ஒரு குழுவை நியமித்து, சி.பி.எஸ்.இ. பாடங்களைக் குறைக்க வேண்டுமேயொழிய, பா.ஜ.க. அரசு கல்வித் துறையில் இந்துத்துவ சனாதனக் கோட்பாடுகளைப் புகுத்தக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
Citizenship, Nationalism and ‘Secularism topics deleted from CBSE syllabus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X