டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு தற்காலிக விமான சேவை.. எந்தெந்த நாடுகள் இதில் அடங்கும்?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு தற்காலிக சர்வதேச விமான சேவை துவக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்துக்கு துபாய் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த நாட்டின் பெயர் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

பெத்த பதவியை பெற்ற பின்னரும் அகோரி சித்தர் சந்திப்பு தேவையா?திமுகவில் துரைமுருனுக்கு கடும் எதிர்ப்புபெத்த பதவியை பெற்ற பின்னரும் அகோரி சித்தர் சந்திப்பு தேவையா?திமுகவில் துரைமுருனுக்கு கடும் எதிர்ப்பு

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இந்த புதிய ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், மாலத்தீவுகள், நைஜீரியா, ஜப்பான், கத்தார், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 13 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து விமான சேவை துவங்கும்.

இருதரப்பு சேவை

இருதரப்பு சேவை

இதுகுறித்த அறிவிப்பை மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ''இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு செல்வதற்கு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், மாலத்தீவுகள் உள்பட 13 நாடுகளுக்கு செல்லலாம். இரண்டு நாடுகளிலும் இருந்து விமான சேவை துவங்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா வரலாம்

இந்தியா வரலாம்

இருதரப்பிலும் சில நிபந்தனைகளுடன் விமானங்களை இயக்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசா வைத்து இருக்கும் இந்தியர்கள் இந்த நாடுகளுக்கு ஒரு மாதம் சுற்றுப் பயணம் செய்வதற்கு தகுதி படைத்தவர்கள். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அல்லாதவர்களும் இந்த நாடுகளில் இருந்து இந்தியா வரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏஜென்ட்கள்

ஏஜென்ட்கள்

யார் எல்லாம் இந்தியாவில் இருந்து இந்த நாடுகளுக்கு செல்லலாம் மற்றும் அந்த நாடுகளில் இருந்து இந்தியா வரலாம் என்பது குறித்து இந்திய விமானப் போக்குவரத்து துறை விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அனைத்து விமான நிறுவனங்களும் டிக்கெட்டுகளை ஆன் லைனில் விற்பனை செய்யலாம். ஏஜென்ட்கள் மூலமும் விற்கலாம். உலக விநியோக முறையும் பின்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், கல்ஃப் ஏர் ஆகிய விமானங்கள் தங்களது சேவையை துவக்கும். இருமார்க்கத்திலும் இருந்து இந்த விமானங்கள் தங்களது சேவையை துவக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Civil Aviation announces Indians Can Fly to 13 Countries including Japan, UK, Canada
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X