டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரும்பும் மாநிலத்தில் பணி நியமனம் கேட்க மத்திய சிவில் ஊழியருக்கு உரிமை இல்லை- உச்சநீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: குடிமைப் பணிகள் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் சொந்த மாநிலங்களில் பணியமர்த்துவது அடிப்படை உரிமை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பணிக்கு சேர விரும்பும் ஆரம்ப காலத்தில் எந்த ஒரு மாநிலத்திலும் வேண்டுமானாலும் பணியாற்ற தயார் என்று கூறக் கூடியவர்கள் பின்னர் தங்களது சொந்த மாநிலங்களுக்குள் சுருக்கிக் கொள்கிறார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மண்டல் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் இந்த நேரத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

வைரல் வீடியோ..! பிரஸ் மீட்டின்போது திடீர் நிலநடுக்கம்.. அப்போதும் அசராத பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் வைரல் வீடியோ..! பிரஸ் மீட்டின்போது திடீர் நிலநடுக்கம்.. அப்போதும் அசராத பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

சலுகை வழங்க வேண்டாம்

சலுகை வழங்க வேண்டாம்

இட ஒதுக்கீடு பலனை பெறாமல், யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை சேர்ந்தவர்களுக்கு, பணியிட நியமனத்தின்போது அந்த சலுகையை வழங்க தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியான சைனாமோல், இமாச்சல பிரதேசத்தில் பணி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து கேரள ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது கோரிக்கைப்படி கேரளாவில் சீனாமோலை பணி நியமனம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரள ஹைகோர்ட் தீர்ப்பு ரத்து

கேரள ஹைகோர்ட் தீர்ப்பு ரத்து

இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

தேர்வுக்கு முன்பு

தேர்வுக்கு முன்பு

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், பழங்குடியினர் தாழ்த்தப்பட்ட அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் இட ஒதுக்கீடு பலனை பெறாமல் ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால் பிறகு கேடர் அல்லது எங்கு பணியாற்ற வேண்டும் என்ற விஷயங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு சலுகையை பெற முடியாது. பணியாளர்களை எங்கு பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது அடிப்படை உரிமையில் வராது. ஐஏஎஸ் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும்போது இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்ற தயார் என்றுதான் கூறி தேர்வுக்கு வருகிறார்கள். ஆனால் தேர்வான பிறகு அவர்கள் தங்களை சுருக்கிக் கொண்டு தங்களது சொந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கு விவரம்

வழக்கு விவரம்

கேரளாவைச் சேர்ந்த சீனாமோல், 2006ஆம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் 20வது ரேங்க் பெற்ற நபர் ஆகும். இஸ்லாமிய இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து வந்தவர் என்ற போதிலும் கூட, அவர் அந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வாகவில்லை. பொதுப் பிரிவின் கீழ் தேர்வாகி இமாச்சல பிரதேசத்தில் பணியிடம் செய்யப்பட்டார்.

கேரள ஹைகோர்ட் உத்தரவு

கேரள ஹைகோர்ட் உத்தரவு

இந்த நிலையில்தான் எர்ணாகுளத்தில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் முறையீடு செய்து இருந்தார். அதை விசாரித்த தீர்ப்பாயம், மகாராஷ்டிரா கேடர் அதிகாரியாக நியமனம் செய்ய உத்தரவிட்டது . இதை மத்திய அரசு மற்றும் சீனாமோல் ஆகிய இருவருமே எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினர். அதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் சீனாமோலுக்கு கேரளா கேரக்டர் அதிகாரி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தற்போது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்துள்ளதால் இமாச்சல பிரதேச கேடர் அதிகாரியாக சீனாமோல் தொடர்வார்.

English summary
The supreme court on Friday said that, successful civil service aspirants have no right to be allocated a cadre of their choice or their home state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X