டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்.. அரசுடன் கருத்து வேறுபாடு.. அட்டர்னி ஜெனரல் பதவி விலக முடிவு?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் புகார் தொடர்பான வழக்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் பதவி விலக முடிவெடுத்து இருப்பதாக செ

Google Oneindia Tamil News

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பாலியல் புகார் தொடர்பான வழக்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் பதவி விலக முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும் கூட, அதன் பாதிப்பு இன்னும் குறையவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இதனால் சில குழப்பங்கள், சில மனவருத்தங்கள், மோதல்கள் நிலவி வருகிறது. இதுகுறித்து தி வயர் தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.

Clash with Govt due to CJI case: AG K K Venugopal may resign soon

அதில், ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இந்த புகார், நீதிமன்ற உள்விசாரணையாக நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போட்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு இதை விசாரித்தது. இந்த விசாரணையில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க அவசியம் இல்லை, மேலும் நீதிபதிகள் இந்த விசாரணை குழு அறிக்கையை வெளிப்படையாக வெளியிட தேவையில்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 27 பேருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை இன்னும் கவனமாக விசாரிக்க வேண்டும். மிக முக்கியமாக விசாரணை கமிட்டியில் மாற்றம் செய்ய வேண்டும்.

படிக்க வச்சது எங்க தாத்தா காமராஜர்.. குடிக்க வச்சது உங்க அப்பா கருணாநிதி.. ஸ்டாலினை சீண்டிய சீமான்படிக்க வச்சது எங்க தாத்தா காமராஜர்.. குடிக்க வச்சது உங்க அப்பா கருணாநிதி.. ஸ்டாலினை சீண்டிய சீமான்

உள் விசாரணை அமர்வில் வெளி நபர் ஒருவர் இருக்க வேண்டும். தற்போது இருக்கும் மூன்று பேருமே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள். ஆனால் வெளி நபர் ஒருவர் இதில் இருந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம், முன்னாள் நீதிபதி ஒருவராது இருக்க வேண்டும் என்றும் இவர் கடிதத்தில் கூறியுள்ளார். அப்போதுதான் விசாரணை மீது நம்பிக்கை வரும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மத்திய அரசு இந்த கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. அதன்படி இது உங்கள் கருத்து, உங்கள் சொந்த கருத்து. அதனால் இது மத்திய அரசின் கருத்து இல்லை என்று விளங்கும்படி, அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபாலுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்தது.

இதனால் வழக்கறிஞர் கேகே வேணுகோபால் மீண்டும் கடிதம் எழுதி, இது மத்திய அரசின் நிலைபாடு இல்லை, என்னுடைய கருத்து என்று நீதிபதிகளிடம் கூறி இருக்கிறார். இதையடுத்துதான் மத்திய அரசுக்கும் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபாலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கேகே வேணுகோபால் அட்டர்னி ஜெனரல் பதவியில் இருந்தே விலக முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வருகிறது. ரபேல் வழக்கிலேயே அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபாலுக்கும் அரசுக்கும் இடையில் சிறிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Clash with Govt due to CJI case: Attorney General K K Venugopal may resign soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X