டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி.. அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளார், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

டெல்லி அரசின் பாபா சாஹேப் அம்பேத்கர் (பிஎஸ்ஏ) மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையளித்து வந்த, 28 வயதான டாக்டர் ஜோகிந்தர் சவுத்ரிக்கு கொரோனா தொற்று ஜூன் மாத இறுதியில் உறுதியாகியுள்ளது. ஆனால், ஒரு மாதம் தீவிர சிகிச்சை பெற்றும், கொரோனாவால் ஜோகிந்தர் சவுத்ரி உயிரிழந்தார்.

CM Arvind Kejriwal provides Rs 1 crore to the family of Corona warrior Dr Joginder Chaudhary

இந்த நிலையில், டெல்லி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டாக்டர் ஜோகிந்தர் சவுத்ரியின் குடும்பத்தினரை சந்தித்து ரூ. 1 கோடி நிதி உதவியாக வழங்கியுள்ளார்.

டாக்டர் சவுத்ரியின் தியாகம் மற்றும் டெல்லி மக்களுக்காக செய்த தியாகத்திற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார். டாக்டர் சவுத்ரியின் குடும்பத்தை காப்பாற்ற டெல்லி அரசு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் கூறினார்.

"டாக்டர் சவுத்ரி கொரோனா தொற்று காரணமாக காலமானார், இன்று நான் அவரது குடும்பத்தினரை சந்தித்து ரூ. 1 கோடி நிதி உதவி வழங்கினேன்" என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது -ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது -ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

தொற்றுநோய்களின் போது, ​​மருத்துவர்கள் நோயாளிகளுக்காக இரவும் பகலும் சிகிச்சை அளிக்கின்றனர். டாக்டர் சவுத்ரி டெல்லியின் அத்தகைய போர்வீரர். ஒவ்வொரு நாளும் கேஸ் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பிற மருத்துவ அதிகாரிகளின் இடைவிடாத பணிகள் கணிசமாக பங்களித்துள்ளன. பாசிட்டிவ் விகிதம் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chief Minister Arvind Kejriwal on Monday met with the family of Corona warrior Late Dr. Joginder Chaudhary and handed over a cheque of Rs. 1 crore as financial assistance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X