டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு- ஒடிஷாவின் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டு சிறை

Google Oneindia Tamil News

டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1999-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சராக இருந்தவர் திலீப் ராய். இவரது பதவி காலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

ஜார்க்கண்ட் சுரங்க ஒதுக்கீடு

ஜார்க்கண்ட் சுரங்க ஒதுக்கீடு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிடிஎல் - Castron Technologies Ltd நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு என்பதுதான் வழக்கு. இந்த வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராஷர் விசாரித்து இன்று தீர்ப்பளித்தார்.

3 ஆண்டுகள் சிறை தண்டனை

3 ஆண்டுகள் சிறை தண்டனை

இவ்வழக்கில் திலீப் ராய் உள்ளிட்ட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 1990களில் ஜனதா தள் கட்சியில் இருந்து விலகி பிஜூ ஜனதா தளத்தில் இருந்தவர் திலீப் ராய். பின்னர் காங்கிரஸ், பாஜகவிலும் இணைந்து பணியாற்றினார் திலீப் ராய். முன்னதாக 1985-ல் ஜனதா தள் எம்.எல்.ஏ.வாக ஒடிஷா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் திலீப் ராய். 1990-ல் பிஜூ பட்னாயக் அமைச்சரவையிலும் இடம்பெற்றார் திலீப் ராய்.

டெல்லி எம்.பி.

டெல்லி எம்.பி.

1996-ல் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டு தேவகவுடா அமைச்சரவையில் இடம்பெற்றார். பின்னர் வாஜ்பாய் அரசில் நிலக்கரித்துறை இணை அமைச்சராக இருந்தார் திலீப் ராய். 2002-ல் நவீன் பட்நாயக்கால் பிஜு ஜனதா தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் திலீப் ராய். ஆனாலும் 2002-ல் பாஜக எம்.எல்.ஏக்கள், பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யானார் திலீப் ராய். 2004-ல் காங்கிரஸில் இணைந்த திலீப் ராய், 2009-ல் பாஜகவில் ஐக்கியமானார்.

மீண்டும் பீஜூ ஜனதா தளம்

மீண்டும் பீஜூ ஜனதா தளம்

2014-ல் பாஜகவின் ஒடிஷா எம்.எல்.ஏ.வாக மீண்டும் தேர்வானார். 2018-ல் பாஜகவில் இருந்தும் விலகினார் திலீப் ராய். இதனைத் தொடர்ந்து தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய திலீப் ராய், 2019-ல் நவீன் பட்நாயக்கை சந்தித்து மீண்டும் பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார். ஒடிஷாவில் ஹோட்டல் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனங்களை நடத்தி வருபவர் திலீப் ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Union minister Dilip Ray sentenced to 3 year imprisonment in Coal scam case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X