India
  • search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் நிலக்கரி பற்றாக்குறை.. இந்தியா இருளில் மூழ்கும் அபாயம்? முழு பின்னணி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் வரும் காலத்தில் மீண்டும் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றாலும் கூட, பெரும்பாலான நாடுகளில் இன்னும் கூட அனல் மின் நிலையங்கள் மூலமே அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கு இல்லை.

இப்போது நமது நாட்டின் மின் தேவையில் சுமார் 70% வரை அனல் மின் நிலையங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் இந்தியாவில் மொத்தம் 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

ஏம்பா.. இது நம்ம கார்தானா? சந்தேகமாக கேட்ட எடப்பாடி.. தலைமை செயலகத்தில் நடந்த பரபர சம்பவம்! ஏம்பா.. இது நம்ம கார்தானா? சந்தேகமாக கேட்ட எடப்பாடி.. தலைமை செயலகத்தில் நடந்த பரபர சம்பவம்!

சிக்கல் தீரவில்லை

சிக்கல் தீரவில்லை

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியானது. இதனால் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டது. இதுபோன்ற செய்திகள் சில காலமாகக் குறைந்து இருந்த போதிலும், இந்த பிரச்சினை முழுவதுமாக முடியவில்லை. நிலக்கரி பற்றாக்குறை என்பது நமது நாட்டில் இன்னும் முக்கிய பிரச்சினையாகவே உள்ளது. இதைத் தீர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அடுத்த 12 மாதங்கள்

அடுத்த 12 மாதங்கள்

இதனிடையே மத்திய அரசு இப்போது எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டில் அடுத்த 6-12 மாதங்களுக்கு நிலக்கரி பற்றாக்குறை இருக்கும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. கடந்த இரண்டு வாரங்களாகவே, நிலக்கரி தட்டுப்பாட்டைச் சமாளிக்க மின்துறை அமைச்சகம் பல்வேறு மாநில அதிகாரிகளுடன் பல ஆய்வு மற்றும் திட்டமிடல் கூட்டங்களை நடத்தி வருகிறது. உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச அளவில் நிலக்கரி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது நமது நாட்டில் மோசமான நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும் சிக்கல் உள்ளது.

இறக்குமதி

இறக்குமதி

தற்போதைய சூழலில் இறக்குமதி செய்யப்பட்டும் நிலக்கரியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒரு டன்னுக்கு 300 டாலரை விட அதிகம் கொடுக்க வேண்டி உள்ளது. நமது நாட்டில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியில் குறைந்தது 10% இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைக் கலைக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் உள்ளதால், கோல் இந்தியா நிறுவனம் 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மின்துறை அமைச்சகம்

மின்துறை அமைச்சகம்

இது தொடர்பாகக் கடந்த மே 28ஆம் தேதி மத்திய மின்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், "மாநில அரசுக்குளுக்கு மிக்ஸ் செய்யப்பட்ட நிலக்கரியை விநியோகம் செய்ய வேண்டும் என்பதால் கோல் இந்தியா நிலக்கரியை இறக்குமதி செய்யும்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும், மின் துறை அமைச்சகம் ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக செக்சன் 11ஐ அமல்படுத்தி உள்ளது. அதாவது இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைக் குறிப்பிட்ட அளவு கலக்க வேண்டும் என்ற விதியை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால் அடுத்த மார்ச் வரை 32 ஜிகாவாட் வரை திறன் கொண்ட உள்நாட்டு அனல் மின் நிலையங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளை அரசு கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கோல் இந்தியா

கோல் இந்தியா

கோல் இந்தியா நிறுவனம் கடந்த 2021-22 நிதியாண்டில் 622.6 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்தது. இது கடந்த 2020-21 நிதி ஆண்டில் 596.2 மில்லியன் டன் ஆக இருந்தது. அதாவது இந்த ஆண்டில் நிலக்கரி உற்பத்தி 4 சதவீதம் அதிகரித்து உள்ளது. இருப்பினும் வெப்ப அலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீடுகளில் மின் தேவை அதிகரித்துள்ளது. அதேபோல தொழில்துறையினருக்கும் மின் தேவை அதிகரித்துள்ளதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

9 நாட்கள்

9 நாட்கள்

இத்துடன் முறையாக ரயில் ரேக்குகள் கிடைக்காததால், நிலக்கரியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதிலும் சிக்கல் இருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் சுமார் 85%க்கும் அதிகமான அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. நமக்கு இப்போது சராசரியாகத் தினசரி 2747 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. இப்போது நம்மிடம் கையிருப்பில் 22169 ஆயிரம் டன்கள் மட்டுமே உள்ளது. இது நமக்கு 8-9 நாட்கள் மட்டும் வரும் என்பதால் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுக்கத் தொடங்கி உள்ளனர்.

English summary
Coal shortage is likely to persist over the next 6-12 months in India: Central govt: Power Ministry held several meetings on coal shortage issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X