டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரலாறு காணாத பனிப்பொழிவில் காஷ்மீர்... உறைந்து போனது தால் ஏரி

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் உறைந்து போனது தால் ஏரி-வீடியோ

    டெல்லி: காஷ்மீரில் வரலாறு காணாத பனியால் மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், புகழ்பெற்ற தால் ஏரி உறைந்துள்ளது.

    டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது கடுமையான பனி நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் நிலவி வரும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, அவ்வப்பொழுது விமான சேவைகளில் மாற்றம் நிகழ்ந்தன.

    விமானங்கள் தரையிறங்க முடியாமலும், குறித்த நேரத்துக்கு புறப்பட முடியாமலும் இருந்தன. ஜம்முகாஷ்மீரிலும் தற்போது கடந்த காலங்களில் இல்லாத அளவு தற்போது கடும் பனி நிலவி வருகிறது.

    கடும் பனிப்பொழிவு

    கடும் பனிப்பொழிவு

    காஷ்மீரின் கார்கில் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. தெற்கு காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மைனஸ் 5.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கோகர்நகர் பகுதியில் மைனஸ் 5.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

    குளிரும் பகல்

    குளிரும் பகல்

    பாகல்காம் பகுதியில் இரவு நேர வெப்பநிலையும் தொடர்ந்து குறைந்தே காணப்படுகிறது. தொடரும் பனியால் காஷ்மீரில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் உறை நிலைக்கு சென்றுவிட்டன. சுற்றுலா பயணிகளின் வெகு விருப்பமான தால் ஏரியும் உறைந்து போயுள்ளது.

    தால் ஏரி உறைந்தது

    தால் ஏரி உறைந்தது

    தால் ஏரி உறைந்து போயிருப்பதைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள். அதேசமயம், உறைந்து போன தால் ஏரியை சுத்தம் செய்வது தொடர்பாக நகர நிர்வாகத்திற்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாம்.

    மூடப்பட்ட சாலை

    மூடப்பட்ட சாலை

    பனிகாரணமாக தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் லடாக்-முகால் சாலை மூடப்பட்டது. கடுமையான பனியின் தாக்கத்தால் அனைத்து தரப்பு மக்களும், வீடுகளில் முடங்கி உள்ளனர். இதே நிலை அடுத்துவரக் கூடிய சில நாட்கள் வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    English summary
    In Jammu and Kashmir, Dal Lake starts to freeze, cold wave to grow bitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X