டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

119 வருஷத்திற்கு பிறகு இப்போதான் இப்படி.. நடுங்கும் டெல்லி

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பகல் நேர வெப்பநிலை திங்கள்கிழமையான இன்று, 119 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவுக்கு சரிவடைந்துள்ளது. இதனால் மக்கள் 'நடுக்கத்தில்' உள்ளனர்.

1901 ஆம் ஆண்டுக்கு பிறகு, டிசம்பர் மாதத்தின், டெல்லியின் மிகக் குளிரான நாளாக, இன்றைய தினம் மாறும் என்று ஐஎம்டி வெதர், வானிலை ஆய்வு மையம் ட்வீட் செய்துள்ளது.

Coldest December day in Delhi in 119 years?

இந்த குளிர்காலத்தில் டெல்லி வழக்கத்திற்கு மாறாக குறைந்த வெப்பநிலையைக் கண்டது என்றும் கடந்த வாரம், குறைந்தபட்ச வெப்பநிலை 2.4 டிகிரி செல்சியஸாக பதிவு செய்யப்பட்டது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கான, கடுமையான குளிர்காலமாக இருக்கும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

"டெல்லி கடந்த 119 ஆண்டுகளில் முதல் முறையாக, டிசம்பர் மாதத்திற்கான மிக குளிரான நாளாக இன்று பதிவாகியுள்ளது. பகல் நேர வெப்பநிலை 119 ஆண்டுகளில் முதல் முறையாக குறைவாக பதிவுசெய்யப்பட வாய்ப்புள்ளது. சஃப்தர்ஜங் பகுதியின் பகல் நேர வெப்பநிலை 9.4 டிகிரி மற்றும் பாலாமின் வெப்ப நிலை 9 டிகிரி செல்சியஸ்" என்று கணிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் திங்கள்கிழமை காலை பனி மூட்டத்தோடுதான் கண் விழித்தன. பனி மூட்டம் காரணமாக, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து 21 விமானங்கள் திருப்பி விடப்பட்டது. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சுமார் 30 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

வானிலை நிறுவனம் டெல்லிக்கு கடந்த சனிக்கிழமை, "சிவப்பு" எச்சரிக்கையை வெளியிட்டது - அதாவது தீவிர வானிலைக்கான எச்சரிக்கை இது. இன்னும் இரண்டு நாட்கள் வட இந்தியாவில் கடுமையான குளிர் காலநிலை நிலவும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்தது.

இந்த மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 19.15 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என தெரிகிறது. ஒருவேளை அப்படி நடந்தால், அது 1997க்கு பிறகான குளிரான டிசம்பர் மாதமாக மாறும். 1997ல் டெல்லியின் டிசம்பர் மாத சராசரி 17.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. அதற்கு முன்பு, 1901தான், மிக குறைந்த அதிகபட்ச வெப்பநிலை கொண்ட டிசம்பர் மாதமாக இருந்தது.

1901 மற்றும் 2018 க்கு இடையிலான நான்கு சந்தர்ப்பங்களில் மட்டுமே, அதாவது, 1919, 1929, 1961 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில், டிசம்பர் மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸுக்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தது. அதன்பிறகு இந்த வருடம்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

English summary
Delhi likely to record most coldest day today in last 119 year for Dec Month as day temp till 1430 IST of today has been unusually following a coldest trend with Safdarjung at 1430 IST has 09.4deg
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X