For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசின் முற்றுரிமை நீக்கம்.. நிலக்கரி துறையில் தனியாருக்கு அனுமதி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நிலக்கரித் துறையில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும் என்றும், அரசின் முற்றுரிமை நீக்கப்படுவதாகவும், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Recommended Video

    பல துறைகளில் தனியார் முதலீடுக்கு அனுமதி- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

    லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நிதி பேக்கேஜ் அளிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

    இந்த நிதி எந்த துறைகளுக்கு ஒதுக்கப் படுகிறது என்பது தொடர்பாக தொடர்ச்சியாக இன்று நான்காவது நாள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    5 லட்சம் ஏக்கரில் தொழில் பூங்காக்கள்.. நாடு முழுக்க தரவரிசைப்படுத்தப்படும்.. நிர்மலா சீதாராமன்! 5 லட்சம் ஏக்கரில் தொழில் பூங்காக்கள்.. நாடு முழுக்க தரவரிசைப்படுத்தப்படும்.. நிர்மலா சீதாராமன்!

    நிலக்கரி துறை

    நிலக்கரி துறை

    அப்போது அவர் கூறுகையில், நிலக்கரி, கனிம தாதுக்கள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, விமான துறை, விண்வெளி, அணு ஆயுத துறை உள்ளிட்ட 8 துறைகள் சார்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்படும். நிலக்கரித் துறை என்பது இதுவரை மத்திய அரசின் முற்றுரிமை பெற்ற தொழிலாக இருந்தது. இனிமேல் நிலக்கரி துறையில் தனியார் அனுமதிக்கப்படுவார்கள்.

    மீத்தேன் வாயு

    மீத்தேன் வாயு

    நிலக்கரியை எடுக்கக்கூடிய பகுதிகளில் மீத்தேன் வாயு பிரித்தெடுக்கும் ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதேநேரம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் அரசு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும். 50 நிலக்கரி தொகுதிகள் உடனடியாக வழங்கப்படும். உச்சவரம்புடன் முன்பண கட்டணம் பெறப்படும்.

    வருவாய் பகிர்வு

    வருவாய் பகிர்வு

    நிலையான நிதி பெறும் நடைமுறைக்கு பதிலாக வருவாய் பகிர்வு அடிப்படையில் இது செய்யப்படும். எந்தவொரு தரப்பினரும் நிலக்கரி பிளாக்குகளை ஏலம் எடுத்து ஓபன் சந்தையில் விற்கலாம். நிலக்கரி கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்கிறது.

    கனிமம்

    கனிமம்

    கனிம துறையிலுள்ள கெடுபிடிகளும் குறைக்கப்படுகிறது. பாக்சைட், நிலக்கரி சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும். 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும். பிற நிறுவனங்களுக்கு குத்தகையை மாற்றவும் அனுமதி தரப்படுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    English summary
    Commercial mining in coal sector to be brought in; govt monopoly to be removed, says FM on structural reforms
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X