டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு வருசம் வேலை பார்த்தாலே கிராஜுட்டி.. வேலைக்கு போகும் அனைவருக்குமே அடிக்க போகும் லக்!

Google Oneindia Tamil News

டெல்லி: தொழிலாளர் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் இரண்டு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், ஒரு வருட சேவைக்குப் பிறகு ஊழியர்களுக்கு கிராஜுட்டியை (பணகொடையை) நிறுவனங்கள் வழங்க வேண்டியிருக்கும்.

பணிக்கொடை (Gratuity) என்பது தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த காலத்திற்கேற்ப அந்நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கும் தொகை ஆகும். 1972ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் விதிமுறைப்படி , ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஐந்து வருடங்கள் ஊழியர்கள் பணியாற்றிய ஊழியர்களுக்கு கிராஜுட்டி வழங்கப்படுகிறது.

ஐந்து வருடத்திற்கு பின் வழக்கமாக ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறும்போது அல்லது வேலையிலிருந்து நீக்கப்படும் போது அல்லது அவர் ஓய்வு பெறும்போது இந்த தொகை வழங்கப்படுகிறது. அதேபோல ஒரு ஊழியர் இறந்தால் அல்லது விபத்து காரணமாக வேலையை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால், அவர்கள் 5 ஆண்டுகள் தொடர்ச்சியான பணியில் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு பணிக்கொடை (நன்றித் தொகை என கூறுவார்கள்) வழங்கப்பட வேண்டும். இறந்துவர்களின் வாரிசுகளுக்கு இந்த கிராஜுட்டி வழங்கப்படுகிறது.

கனிமொழியின் பாதிப் படத்தைப் போட்டு ரொம்ப நாளா குழப்பினார்களே.. உண்மையான படம் இதுதானாம்!கனிமொழியின் பாதிப் படத்தைப் போட்டு ரொம்ப நாளா குழப்பினார்களே.. உண்மையான படம் இதுதானாம்!

யாருக்கு கிராஜுட்டி

யாருக்கு கிராஜுட்டி

கிராஜுட்டி சட்டம் 1972 விதிகளின்படி, அதிகபட்சமாக ரூ .20 லட்சம் வரை இருக்கலாம். கிராஜுட்டியைப் பொறுத்தவரை, ஊழியர் ஒரே நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றுவது கட்டாயமாகும். இந்த கால கட்டத்திற்கு குறைவாக ஒருவர் வேலையை விட்டு வெளியேறினால், பணியாளருக்கு கிராஜுட்டி பெற தகுதி (Gratuity Eligibility) இல்லை. 4 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் பணியாற்றி இருந்தாலும் கிடைக்காது.

 இரண்டு பரிந்துரை

இரண்டு பரிந்துரை

இந்நிலையில் சமூக பாதுகாப்புக் குறியீடு மற்றும் தொழில்துறை தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு இரண்டு பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது, இதை நன்கு ஆராய்ந்து பார்த்தால், கிராஜுட்டி கொடுப்பதற்கான ஐந்தாண்டு சேவை விதியை எளிதாக்குவதற்கு போதுமான காரணங்கள் உள்ளன என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எல்லாருக்குமே

எல்லாருக்குமே

கிராஜுட்டி செலுத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு விதியை, ஒரு வருடமாக குறைக்கப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. "ஒப்பந்தத் தொழிலாளர்கள், பருவகால தொழிலாளர்கள்,பீஸ் ரேட் (piece-rate) தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர ஊழியர்கள் மற்றும் தினசரி / மாத ஊதியத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து வகையான ஊழியர்களுக்கும் இத்தகைய ஏற்பாடு விரிவுபடுத்தப்பட வேண்டும்" என்று அது தனது அறிக்கையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

நீண்ட கால வேலைவாய்ப்பு

நீண்ட கால வேலைவாய்ப்பு

தொழிலாளர் சந்தையின் மாறிவரும் யதார்த்தங்களை மனதில் கொண்டு, கிராஜுட்டி செலுத்தும் கால வரம்பைக் குறைக்க மத்திய பரிசீலித்து வருவதாக திங்கள்கிழமை கூறியிருந்தோம். ஏனெனில் தற்போது தொழிலாளர் சந்தை இப்போது நீண்ட கால வேலைவாய்ப்பு என்கிற முந்தைய சூழ்நிலைக்கு மாறாக, ஒப்பந்த அடிப்படையிலும், குறிபிட்ட காலம் மட்டும் வேலை பார்க்கும் ( fixed-term work ) சூழல் உருவாகியுள்ளது.

தொழிலாளர் நலன்

தொழிலாளர் நலன்

தொழில்துறை உறவுகளிள் நிலை குறித்த அறிக்கையை, பிஜேடி எம்பிபரத்ருஹரி மஹ்தாப் தலைமையிலான தொழிலாளர் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், "தொழிலாளர்கள் / ஊழியர்களுக்கு கிராஜுட்டி செலுத்த ஐந்து வருட கால அவகாசம் மற்றும் காலவரையறையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ள நிலையில், தொழிலாளர் அமைச்சின் செயலாளரின் கருத்துக்களைக் கேட்க விரும்பியது. "

மத்திய அரசு கையில்

மத்திய அரசு கையில்

இதற்கு பதிலளித்த தொழிலாளர் அமைச்சக செயலாளகம் " தற்போது நிலையான கால வேலைவாய்ப்பு (ixed-term employment) உள்ளதை குறிப்பிட்டுள்ளதுடன் தொழிலாளர்கள் கிராச்சுட்டியையும் பெற வேண்டும் என்று விரும்புவதாகவும், ஒரு வருடம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்" என்று ஐஆர் குறியீடு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாம். மத்திய அரசு பரிந்துரையை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் ஒரு வருடமாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.

English summary
Companies may be equire to pay gratuity gratuity after just one year of service if the government accepts recommendations of a parliamentary panel on labour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X