டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினிகாந்தை விட்டுவிட்டு.. ஏன் விஜயை டார்கெட் செய்கிறீர்கள்?.. லோக்சபாவில் தயாநிதி கடும் கோபம்!

நடிகர் ரஜினிகாந்திற்கு வரிச்சலுகை அளித்த வருமானவரித்துறை நடிகர் விஜயை குறிவைப்பது ஏன்? என்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Dayanidhi Maran's speech on Rajini and Vijay in Lok Sabha

    டெல்லி: நடிகர் ரஜினிகாந்திற்கு வரிச்சலுகை அளித்த வருமானவரித்துறை நடிகர் விஜயை குறிவைப்பது ஏன்? என்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் வேகமாக தயாராகி வருகிறது. இதற்கு இடையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனையின் முடிவில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை. தற்போது விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

    அதே சமயம் சென்னையில் ஏஜிஎஸ் சினிமா பட தயாரிப்பு நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. இதில் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பட்ஜெட் விவாதம்

    பட்ஜெட் விவாதம்

    இந்த நிலையில் மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன் நடிகர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதில், நடிகர் ரஜினிகாந்திற்கு வரிச்சலுகை அளித்த வருமானவரித்துறை நடிகர் விஜயை குறிவைப்பது ஏன்?. ரஜினிக்கு சலுகை தரும் வருமானவரித்துறை, மற்றொரு புறம் விஜய் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கிறது. என்ன நடக்கிறது வருமான வரித்துறையில்?

    ரஜினி சலுகை

    ரஜினி சலுகை

    ரஜினிக்கு 1 கோடிக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய்க்கு அப்படி இல்லை. விஜய்யை பார்த்து பயந்து அவரை குறி வைத்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அவரை ஷூட்டிங் நடந்த இடத்தில் இருந்து அழைத்து வந்துள்ளனர். திருநெல்வேலியில் இருந்து அழைத்து வந்துள்ளார். என்ன கொடுமை இது, என்று நடிகர் விஜய்க்கு ஆதரவாக தயாநிதி மாறன் பேசினார்.

    விஜய் எப்படி

    விஜய் எப்படி

    முன்னதாக விஜய் வீட்டில் நடந்த ரெய்டுக்கு பின் தமிழக காங்கிரஸ், விஜய்க்கு நேரடியாக ஆதரவு அளித்தது. . எதிர்க்கட்சிகள் இப்போதே விஜயை ஆதரிக்க தொடங்கிவிட்டது. முன்னணி நடிகர்கள் பலர் இதேபோல் விஜயை ஆதரிக்க தொடங்கிவிட்டனர். அதேபோல் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

    ஆதரவு

    ஆதரவு

    திமுக தலைவர்கள் சிலர் விஜய்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள். அதேபோல் திமுகவின் உதயநிதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விஜயிடம் போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தயாநிதி மாறன் விஜய்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இதனால் விஜயை திமுக தங்கள் பக்கம் மொத்தமாக இழுக்க பார்க்கிறதா, ரஜினிக்கு எதிராக விஜய்யை பயன்படுத்த திமுக நினைக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Concession for Rajinikanth, But summon for Vijay asks Dayanidhi Maran in Lok Sabha today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X