டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹேப்பி அண்ணாச்சி.. ஜூன் 1 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை- வானிலை மையம்

Google Oneindia Tamil News

டெல்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந் தேதியே தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. கீழ்க்கண்ட தகவல்களைத் தெரிவித்து உள்ளது:

Recommended Video

    5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்- வானிலை மையம் தகவல்
    Conditions favourable for advance of southwest Monsoon

    இது தொடர்பாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிவிக்கை:

    • மேற்குதிசை காற்று வலுவடைந்து வருவதாலும், வெப்பச்சலன மேகங்கள் அதிகரிப்பதாலும் மாலத்தீவுகள்-கன்னியாகுமரியின் சில பகுதிகள், வங்காள விரிகுடாவின் தெற்குப் பிராந்தியத்தின் சில பகுதிகள், அந்தமான் கடலின் எஞ்சிய பகுதிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழைக்கான சாத்தியங்கள் அதிகமாகி உள்ளன.
    • அடுத்த 48 மணி நேரத்தில் மாலத்தீவு-கன்னியாகுமரியின் மேலும் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழைக்கான சாதகமான சூழல்கள் நிலவி வருகிறது.
    • அரபிக் கடலின் தென்கிழக்கு அதனை ஒட்டிய கிழக்கு - மத்திய அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மே 31 முதல் ஜுன் 4 வரை ஏற்படலாம். இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழையானது ஜுன் 1 முதல் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளன.
    • அரபிக்கடலின் மேற்கு மத்தியப் பிராந்தியம் மீது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் அதே பிராந்தியத்தில் இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறக் கூடும். அடுத்த மூன்று நாட்களில் இது தெற்கு ஓமன் மற்றும் கிழக்கு ஏமன் கடற்கரையை நோக்கி வடமேற்காக நகரக் கூடும்.
    • மீனவர்கள் மே 29 முதல் ஜுன் 1 வரை மேற்குமத்திய அரபிக்கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
    • மே 31 முதல் ஜுன் 4 வரை அரபிக்கடலின் தென் கிழக்கு - கிழக்கு மத்திய பகுதிகளுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்.

    இவ்வாறு வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

    சூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம் சூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்

    English summary
    According to India Meteorological Department, According to the National Weather Forecasting Centre of the India Meteorological Department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X