டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேற்கு வங்க சட்டசபை தேர்தல்: இடதுசாரிகளுடன் கூட்டணி- காங். அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தலை இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்ளப் போவதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேற்கு வங்க சட்டசபைக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த பாஜக படுதீவிரமாக முயற்சிக்கிறது.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நிலையான வலிமையான வாக்கு வங்கி இருப்பதால் அவ்வளவு எளிதாக அந்த கட்சியை வீழ்த்த முடியாது. அதேநேரத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகியவை தனித்து நின்றால் நிச்சயம் திரிணாமுல் காங்கிரஸுக்குதான் இழப்பு ஏற்படும். லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றதுக்கு இடதுசாரிகளும்- காங்கிரஸும் தனித்து போட்டியிட்டதுதான் காரணம்.

மேற்கு வங்கத்தில்... பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்... பலர் காயம்! மேற்கு வங்கத்தில்... பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்... பலர் காயம்!

சோனியா காந்தியுடன் இணக்கம்

சோனியா காந்தியுடன் இணக்கம்

இதனை உணர்ந்தே எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வலியுறுத்தினார். மேலும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டங்களிலும் மமதா பானர்ஜி பங்கேற்றார். மமதாவைப் பொறுத்தவரையில் இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி அமைத்து பாஜகவுக்கு செல்லும் வாக்குகளைத் தடுத்து நிறுத்தினாலே தங்களால் எளிதாக வெல்ல முடியும் என்பதுதான் கணக்கு.

சிபிஎம் ஓகே

சிபிஎம் ஓகே

இதனிடையே மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கடந்த அக்டோபர் மாதம் ஒப்புதல் தெரிவித்திருந்தது. கேரளாவில் இருகட்சிகளும் பரம எதிரிகளாக இருந்தாலும் மாநிலங்களுக்கேற்ப முடிவெடுப்பது என்கிற யுக்திக்கு ஓகே சொன்னது மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு. தமிழகத்திலும் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸும் இடதுசாரிகளும் உள்ள என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

காங். அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

காங். அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுடனான கூட்டணிக்கு காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் அளித்திருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அறிவித்துள்ளார். 2019 லோக்சபா தேர்தலில் இடதுசாரிகளும் காங்கிரஸும் தனித்தனியே தேர்தலை எதிர்கொண்டன. மேற்கு வங்கத்தில் 39 தொகுதிகளில் இடதுசாரிகள் டெபாசிட்டையே இழந்தனர். ஒரு தொகுதியில் கூட வெல்லவும் இல்லை. காங்கிரஸ் கட்சி 2 லோக்சபா தொகுதிகளில் மட்டுமே வென்றது.

2016 கூட்டணி நிலவரம்

2016 கூட்டணி நிலவரம்

2016 மாநில சட்டசபை தேர்தலில் இடதுசாரிகளும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 76 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. மொத்தம் 38% வாக்குகளை காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணி பெற்றது. இடதுசாரிகள் மட்டும் 26% வாக்குகளையும் காங்கிரஸ் 12% வாக்குகளையும் பெற்றன. வாக்கு சதவீதம் குறைவாக கிடைத்த போதும் காங்கிரஸ் கட்சிக்கு 44; இடதுசாரிகளுக்கு 32 இடங்கள் கிடைத்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Congress party today announced that they will alliance with Left front for West Bengal assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X