டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங். தலைவராக இந்திரா குடும்பம்தான்... 4 முதல்வர்கள், மாநில தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஆதரவு

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக இந்திரா காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இருக்க வேண்டும் என காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2019 லோக்சபா தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அவரைத் தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.

சோனியா காந்தி பதவியேற்று ஓராண்டு நிறவைடைந்த நிலையில் புதிய தலைவர் யார் என்கிற விவாதங்கள் காங்கிரஸில் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 23 காங்கிரஸ் மூத்த தலைவரகள், கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

சோனியா vs சீனியர்கள்.. அவசர அவசரமாக காரிய கமிட்டி கூட்டம்.. காங்கிரஸில் நாளை நடக்க போகும் அதிரடி!சோனியா vs சீனியர்கள்.. அவசர அவசரமாக காரிய கமிட்டி கூட்டம்.. காங்கிரஸில் நாளை நடக்க போகும் அதிரடி!

காங். இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி ராஜினாமா செய்யவில்லை- ரந்தீப்சிங் சுர்ஜிவாலாகாங். இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி ராஜினாமா செய்யவில்லை- ரந்தீப்சிங் சுர்ஜிவாலா

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? சோனியாவிற்கு பறந்த கடிதம்.. 23 மூத்த தலைவர்கள் கோரிக்கைகாங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? சோனியாவிற்கு பறந்த கடிதம்.. 23 மூத்த தலைவர்கள் கோரிக்கை

டெல்லியில் காங். செயற்குழு

டெல்லியில் காங். செயற்குழு

இதனிடையே காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமையன்று டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக தமது இடைக்கால தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

காங். முதல்வர்கள் ஆதரவு

காங். முதல்வர்கள் ஆதரவு

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தனித்தனியாக காங்கிரஸ் தலைமை பதவி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கைகளில் இந்திரா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியை ஏற்க வேண்டும்; தற்போதைய நிலையில் பாஜகவை வீழ்த்த ஒற்றுமைதான் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.

அசோக் கெலாட், நாராயணசாமி

அசோக் கெலாட், நாராயணசாமி

மேலும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், சோனியாகாந்திதான் காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். புதுவை முதல்வர் நாராயணசாமி தமது ட்விட்டர் பக்கத்தில், ஃபேஸ்புக் சர்ச்சையில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கான பாஜகவின் சதிதான் இத்தகைய கருத்து பரப்பல்கள். காங்கிரஸ் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் பாஜகவின் முயற்சி இது என சாடியுள்ளார்.

அழகிரி ட்வீட்

அழகிரி ட்வீட்

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி, அன்னை சோனியா காந்தி கட்சியின் தலைவராகத்தொடர வேண்டும்.கோடிக்கணக்கான இந்திய மக்களும்,காங்கிரஸ் கட்சியின் செயல் மறவர்களும் சோனியா, இராகுலை பின் பற்றுகிரார்கள் என்று தமது ட்விட்டர் பேஜில் பதிவிட்டுள்ளார். இதேபோல் பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் சோனியா காந்தி தலைவராக நீடிக்க வேண்டும் அல்லது இந்திரா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தலைவராக இருக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர்.

English summary
All Congress Chief Minsiters and State Presiddents supported to Gandhis for Congress leadership
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X