டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புல்வாமாவில் 44 வீரர்கள் பலியானபோது டிஸ்கவரி சேனல் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த மோடி: காங். பாய்ச்சல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi in man vs wild | நடுக்காட்டில் மோடி.. கையில் துப்பாக்கி.. வாய்விரிய வைக்கும் ஆச்சரியம்

    டெல்லி: புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 44 ராணுவ வீரர்களை படுகொலை செய்த போது டிஸ்கவரி சேனல் ஷூட்டிங்கில் பிரதமர் மோடி பிசியாக இருந்தது தற்போது அம்பலமாகிவிட்டது என காங்கிரஸ் சாடியுள்ளது.

    டிஸ்கவரி சேனலில் பிரதமர் மோடி பங்கேற்கும் Man vs Wild சாகச நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 18-ந் தேதி ஒளிபரப்பாகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இது மிகப் பெரும் அரசியல் சர்ச்சையாகி உள்ளது.

    Cong slams Modi was busy shooting film as 40 jawans died in Pulwama attack

    சில மாதங்களுக்கு முன்னர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் 44 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

    இத்தாக்குதல் தொடர்பாக முதல் சில மணிநேரங்கள் பிரதமர் மோடியிடம் இருந்து எந்த கருத்தும் வெளிப்படவில்லை. பின்னர் ஜிம்கார்பெட் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி விளம்பர படப்பிடிப்பில் இருந்ததாக கூறப்பட்டது.

    இந்நிலையில்தான் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சிக்காக ஜிம்கார்பெட் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி சென்றிருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

    புல்வாமாவில் 44 ராணுவ வீரர்கள் பலியானது பிரதமர் மோடி ஷூட்டிங்கில் இருந்திருக்கிறார். இத்தனை பயங்கரமான ஒரு தாக்குதல் நடந்த போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்றிருந்திருக்கிறார் என்பதை அவரது சிரிப்பே வெளிப்படுத்துகிறது.

    இவ்வாறு ஷாமா முகமது சாடியுள்ளார்.

    English summary
    Congress spokesperson Shama Mohamed tweets, When 44 CRPF jawans were martyred in #Pulwama, PM #Modi was having the time of his life shooting for this programme. He was enjoying it so much, that he continued shooting even after being told of the heinous attack! See him laughing carelessly in the trailer in her page.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X