டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா -சீனா மோதல் குறித்து 2013ல் மோடி போட்ட ட்விட்.. அதே கேள்வி.. திருப்பி தாக்கும் காங்கிரஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவத்தினர் சொந்த மண்ணைவிட்டு வெளியேறுவது ஏன் என பிரதமர் மோடி கடந்த 2013ம் ஆண்டு எழுப்பிய கேள்வியை இப்போது மீண்டும் அவருக்கே காங்கிரஸ் எழுப்பி உள்ளது.

Recommended Video

    Indian soldiers ஏன் சொந்த நிலத்திலிருந்து பின் வாங்க வேண்டும் ? | Rahul Gandhi Tweet

    கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் (எல்ஏசி) பதற்றத்தை தணிக்க இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் கால்வான் பகுதியில் இருந்து வெளியேறுகின்றனர்.

    இந்நிலையில் , சீன படைகள் வெளியேறுவது ஒகே.ஆனால் இந்திய ராணுவ வீரர்கள் சொந்த நிலத்தில் இருந்து வெளியேறுவது ஏன் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி கேட்டு எழுப்பிய பழைய ட்வீட்டை காங்கிரஸ் இப்போது தோண்டி எடுத்து அவருக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

    மொத்தமாக இடத்தை காலி செய்த ராணுவம்.. அடங்கிய சீனா.. லடாக் எல்லையில் இன்று நடந்த மொத்தமாக இடத்தை காலி செய்த ராணுவம்.. அடங்கிய சீனா.. லடாக் எல்லையில் இன்று நடந்த "கடைசி" மாற்றம்!

     மோடியின் ட்விட்

    மோடியின் ட்விட்

    2013 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, நரேந்திர மோடி இந்த கேள்வியை எழுப்பி இருந்தார். இதற்கான பதிலை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, பிரதமர் மோடியிடம் கேட்டுள்ளார்.

    ஏன் படைகள் பின்வாங்குகின்றன

    இது தொடர்பாக சுர்ஜேவாலா வெளியிட்ட ட்வீட் பதிவில். "மரியாதைக்குரிய பிரதமர் அவர்களே, உங்கள் வார்த்தைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? உங்கள் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தமா? எங்கள் (இந்திய) படைகள் ஏன் எங்கள் நிலத்திலிருந்து பின்வாங்குகின்றன என்று நீங்கள் பதில் கூறுவீர்களா? நாடு பதில்களைத் தேடுகிறது" என்று கூறியுள்ளார்.

     மோடிக்கு ஆதரவு

    மோடிக்கு ஆதரவு

    காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூரும் பிரதமர் மோடியின் பழைய ட்விட்டை எடுத்து ரீடுவிட் செய்து, பிரதமர் மோடியின் அன்றைய கேள்வியை இன்றைக்கு நான் ஆதரிக்கிறேன். என்று கூறியுள்ளார்.

     இந்தியாவின் இறையாண்மை

    இந்தியாவின் இறையாண்மை

    முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வெளியிட்ட ட்விட் பதிவில். "தேசிய நலன் முக்கியமானது. அதைப் பாதுகாப்பதே இந்திய அரசின் கடமை. எனவே ஏன் இந்தியாவின் நிலை குறித்து வலியுறுத்தப்படவில்லை? எல்லையில் நம்முடைய 20 நிராயுதபாணியான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்த சீனா ஏன் அனுமதிக்கப்படுகிறது? கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவின் இறையாண்மையைப் பற்றி ஏன் குறிப்பிடப்படவில்லை? " என்று கேள்வி கேட்டிருந்தார்.

    English summary
    Congress chief spokesperson Randeep Surjewala digs out PM Modi’s 2013 tweet on India-China: Seeking an answer from PM Modi as to why Indian soldiers were withdrawn from their own land:
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X