டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜூம் செயலிக்கு நோ... சிஸ்கோ வெப் எக்ஸ் செயலிக்கு ஓ.கே... காங்.காரிய கமிட்டி கூட்டம் சுவாரஸ்யம்

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டமானது சிஸ்கோ வெப் எக்ஸ் செயலி மூலம் காணொலி காட்சி வடிவில் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தியின் பதவிக்காலம் கடந்த 10-ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டமானது வழக்கமாக டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறும்.

congress choosed cisco webex app and avoided zoom app

தற்போது கொரோனா பரவல் காரணமாக காணொலிக் காட்சி மூலம் இந்தக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு காணொலி மூலம் நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்திற்கு காங்கிரஸ் தேர்வு செய்த செயலி சிஸ்கோ வெப் எக்ஸ். இதன் மூலம் கூட்டத்தின் வீடியோ காட்சிகள் லீக் ஆகாமல் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் இந்த செயலியை காங்கிரஸ் தேர்வு செய்திருக்கிறது.

மோடிக்கு மோடிக்கு "செக்".. வேட்டி கட்டிய தமிழர்.. சிதம்பரத்தை கையில் எடுக்குமா காங்கிரஸ்.. அதிரடி அரங்கேறுமா?

அதே வேளையில் வீடியோ கான்பிரன்ஸ் கூட்டங்களுக்கு எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஜூம் செயலியை காங்கிரஸ் தவிர்த்திருப்பது கவனிக்கத்தக்கது. இந்த செயலி பாதுகாப்பற்றது என ஏற்கனவே புகார் எழுந்துள்ள நிலையில் பொதுமக்களில் பெரும்பாலானோர் ஜூம் செயலி மூலம் தான் உறவினர்கள், நண்பர்களிடம் வீடியோ காலில் பேசி வருகின்றனர்.

congress choosed cisco webex app and avoided zoom app

சிஸ்கோ வெப் எக்ஸ் செயலி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளதால் இந்த செயலியை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திற்கு அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பரிந்துரைத்துள்ளனர். இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வீட்டில் இருந்தவாறே இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவர் பங்கேற்றுள்ளனர்.

English summary
congress choosed cisco webex app and avoided zoom app
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X