டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..பாஜக விரித்த வலையில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. அடுத்தடுத்த டிவிஸ்ட்

பாஜகவின் திட்டப்படியே காங்கிரஸ் கட்சியில் வரிசையாக நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்த டிவிஸ்ட்.. பாஜக விரித்த வலையில் சிக்கிய காங்கிரஸ்- வீடியோ

    டெல்லி: பாஜகவின் திட்டப்படியே காங்கிரஸ் கட்சியில் வரிசையாக நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. இதில் சில மாற்றங்கள் பாஜகவே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மாற்றங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த தோல்வி காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் எல்லோரும் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி இவ்வளவு பெரிய தோல்வியில் இருந்து மீண்டும் வருவது என்பது மிக மிக கடினமான விஷயம் ஆகும். இந்த நிலையில்தான் பாஜக நினைத்தபடியே காங்கிரஸ் கட்சியில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

    பாஜகவின் 'சித்து விளையாட்டு': குஜராத்திலும் காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவல்! பாஜகவின் 'சித்து விளையாட்டு': குஜராத்திலும் காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவல்!

    தமிழ்நாடு காங்கிரஸ்

    தமிழ்நாடு காங்கிரஸ்

    தமிழ்நாடு காங்கிரஸ் எப்போதும் கோஷ்டி மோதலுக்கு பெயர் போனது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் பல தலைவர்கள் பிரிந்து, குழுவாக செயல்படுவது வழக்கம். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் போலவே மொத்த காங்கிரசும் இந்தியா முழுக்க கோஷ்டி, கோஷ்டியாக பிரிந்துள்ளது. தேர்தல் தோல்வியால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

    பாஜக திட்டம்

    பாஜக திட்டம்

    லோக்சபா தேர்தல் தோல்வியால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்கலாம் என்று பாஜக திட்டம் போட்டது. தற்போது பாஜகவின் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கை கூட தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு தாவலாம் என்ற நிலை உள்ளது. மத்திய பிரதேசத்தில் எந்த நொடி வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளது. ராஜஸ்தானில் ஆட்சியில் ஆட்டம் காண தொடங்கி உள்ளது.

    வேறு என்ன

    வேறு என்ன

    இது இல்லாமல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் வரிசையாக பாஜகவிற்கு தாவி வருகிறார்கள். தேர்தலுக்கு முன் தொடங்கிய இந்த ''தாவல் திணை'' தேர்தலுக்கு பின் அதிகமாகிவிட்டது. காங்கிரசை சேர்ந்த மிக முக்கியமான தலைவர்கள் இன்னும் சில நாட்களில் பாஜகவில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    என்ன ராஜினாமா

    என்ன ராஜினாமா

    இது எல்லாம் போக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார். இவரைப் போலவே பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜக்கரும் பதவி விலக முடிவெடுத்துள்ளார். இன்னும் சில மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய இருக்கிறார்கள் என்று தகவல் வருகிறது.

    அமித் ஷா பிளான்

    அமித் ஷா பிளான்

    காங்கிரஸ் கட்சியின் மாநில ஆட்சிகளை கவிழ்ப்பது தொடங்கி தலைவர்களை பதவி விலக வைத்து கட்சியை பலவீனப்படுத்துவது வரை எல்லாமே பாஜகவின் திட்டப்படி காங்கிரஸ் கட்சியில் நடந்து வருகிறது. ராகுல் காந்தியும் பதவி விலகிவிட்டால், அமித் ஷா திட்டப்படியே காங்கிரஸ் கட்சி மொத்தமாக முடங்கிப் போகும். அப்படி ஒரு மோசமான சூழ்நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்!

    English summary
    Congress falls into the hands of the BJP plan: May face even more worst days in Future.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X