டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா காந்தி.. ஹெல்மெட் அணியாமல் டூவிலரில் சென்றபோது மடக்கிய போலீஸ்!

Google Oneindia Tamil News

லக்னோ: குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் சட்டத்தை கண்டித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ் ஆர் தாராபுரியின் குடும்பத்தினரும் போராட்டம் நடத்தினர்.

Congress General Secretary Priyanka Gandhi travelled in a two wheeler without helmet

அவர்களை போலீஸார் கைது செய்தனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்களை உ.பி. போலீஸ் கைது செய்ததை பல்வேறு எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தாராபுரியின் குடும்பத்தினரை சந்திக்க உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்திக்க விரும்பினார்.

இதையடுத்து கட்சி நிர்வாகி ஒருவருடன் பிரியங்கா இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அவரும் வாகனத்தை ஓட்டிச் சென்றவரும் ஹெல்மெட் அணியவில்லை.

இதனிடையே பிரியங்கா காந்தியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் ஹெல்மெட் அணியாமல் டூவிலரை ஓட்டியது விமர்சனத்திற்குள்ளான நிலையில் தற்போது ஹெல்மெட் அணியாத கட்சி நிர்வாகியுடன் தானும் ஹெல்மெட் அணியாமல் பிரியங்கா பயணம் செய்தது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

கழுத்தை பிடித்து நெரித்தார்கள்.. கீழே விழுந்தேன்.. உ.பி சம்பவம் பற்றி பிரியங்கா காந்தி ஷாக் விளக்கம்கழுத்தை பிடித்து நெரித்தார்கள்.. கீழே விழுந்தேன்.. உ.பி சம்பவம் பற்றி பிரியங்கா காந்தி ஷாக் விளக்கம்

English summary
Congress General Secretary for UP Priyanka Gandhi Vadra travelled on a two-wheeler without helmet while she was on her way to meet family members of Former IPS officer SR Darapuri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X