டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பற்றி எரியும் டெல்லி..ஒரு ரியாக்சனும் இல்லை... வெளிநாட்டில் ஹாயாக ராகுல்.. இப்படியா இருப்பது காங்.?

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லி வன்முறைகளால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.. இந்த தருணத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டிருக்க வேண்டிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இருக்கும் இடமே தெரியாமல் மவுனியாக இருக்கிறது என அதன் கூட்டணி கட்சியினரே விசனத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Recommended Video

    Delhi CAA clash:Supreme Court slams delhi police| டெல்லி போலீசை விளாசிய உச்சநீதிமன்றம்

    சி.ஏ.ஏ. ஆதரவு- எதிர்ப்பு வன்முறை என்பது இரு சமூகங்களிடையேயான மோதலாக டெல்லியில் வெடித்திருக்கிறது. சிறுபான்மையினர் இலக்கு வைத்து கொடூரமாக தாக்கப்பட்டிருக்கின்றனர். இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தலைநகரில் இவ்வளவு பெரிய வன்முறை நிகழ்ந்தும் கூட ஆக்கப்பூர்வமாக களத்தில் இறங்கி செயல்பட்டிருக்க வேண்டிய காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழலில் சிறுபான்மை மக்கள் தங்களது அரணாக காங்கிரஸை பல மாநிலங்களில் கருதுகின்றனர்.

     நீ இந்துவா? இந்தி தெரியாது.. டெல்லி கலவரத்தில் தமிழக செய்தியாளருக்கு நேர்ந்த கதி.. திக் சம்பவம்! நீ இந்துவா? இந்தி தெரியாது.. டெல்லி கலவரத்தில் தமிழக செய்தியாளருக்கு நேர்ந்த கதி.. திக் சம்பவம்!

    எதிர்வினை இல்லையே

    எதிர்வினை இல்லையே

    அப்படியான நிலையில் சிறுபான்மை மக்கள் தாக்குதலுக்குள்ளாகும்போது கை கொடுத்து பாதுகாக்க வேண்டிய கடமை காங்கிரஸுக்கு இருக்கிறது. இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அரசுக்கு நெருக்கடி தர வேண்டிய நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு எதிர்வினையுமே இல்லை.

    டெல்லி காங். செயற்குழு

    டெல்லி காங். செயற்குழு

    இந்த நிலையில் டெல்லியில் சடங்குக்காக இன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. ராகுல் காந்தி தற்போது வெளிநாட்டு பயணத்தில் இருக்கிறாராம்.

    வெளிநாட்டில் ராகுல்

    வெளிநாட்டில் ராகுல்

    ராகுல் காந்தி எதற்காக எப்போது வெளிநாடு செல்கிறார் என்பது மர்மமாகவே இருக்கிறது என்கிற பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கேள்வியை நியாயப்படுத்துவதுபோல் ராகுல் மற்றும் காங்கிரஸின் நடவடிக்கைகள் இருக்கின்றன. டெல்லியை ஆண்ட காங்கிரஸ் கட்சி தங்கள் கண் எதிரிலேயே அப்பாவிகள் ஈவிரக்கமே இல்லாமல் வேட்டையாடப்படுவது குறித்து இப்படி ஒரு கனத்த மவுனத்தை சாதிப்பது ஏன்?

    இஸ்லாமியர்களால் காங்.

    இஸ்லாமியர்களால் காங்.

    இஸ்லாமியர்களின் வாக்குகளைத்தானே இத்தனை காலமாக வாங்கி வளர்ந்தது காங்கிரஸ். ஆனால் அதே இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்போது இப்படி செயலற்றுப் போயுள்ளதே காங்கிரஸ்? டெல்லி சட்டசபை தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மரணித்துப் போகட்டும் என்கிற மரத்துப் போன சிந்தனைதான் காரணமா? இல்லை காங்கிரஸ் இனி செயல்படாது; அங்கே செயல்படுவதற்கான தலைமைகளே இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கவா?

    கேள்விக்குறியாகும் காங். எதிர்காலம்

    கேள்விக்குறியாகும் காங். எதிர்காலம்

    ஏற்கனவே லோக்சபாவில் எதிர்க்கட்சி தகுதியைக் கூட பெற முடியாமல் இருக்கிறது தேசத்தை இத்தனை காலம் ஆண்ட காங்கிரஸ். காங்கிரஸின் இந்த போக்கு நீடித்தால் எந்த ஒரு மக்களின் நம்பிக்கையையும் எந்த ஒரு காலத்திலும் காங்கிரஸ் கட்சியால் பெறவே முடியாது. சிங்கள் டிஜிட் இடத்தைக் கூட நாடாளுமன்றத்தில் பெற முடியாத சவக்குழியை நோக்கித்தான் காங்கிரஸ் செல்லவும் முடியும்

    English summary
    According to the Senior Congress leaders showed their upset over the party naction over Delhi Violence issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X