டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3-ஆவது அணி உருவாக்கத்தை தடுக்க காங். போடும் பக்கா வியூகம்.. களத்தில் இறங்கும் சோனியா

Google Oneindia Tamil News

Recommended Video

    3-ஆவது அணி உருவாக்கத்தை தடுக்க காங். போடும் வியூகம்- வீடியோ

    டெல்லி: 3ஆவது அணி உருவாக்கத்தை தடுக்க பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளிடம் பேச காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வியூகம் வகுத்து வருகிறார்.

    மத்தியில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸும் போராடி வந்தது. இந்த நிலையில் இந்த இரு கட்சிகளும் இல்லாத ஒரு கூட்டணிக்கு தெலுங்கானா முதல்வர் வித்திட்டார்.

    இந்த நிலையில் அது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது மே 23-ஆம் தேதி தெரியவரும். எனினும் 3-ஆவது அணி உருவாக வாய்ப்பே தரக் கூடாது என்பதில் சோனியா காந்தி உறுதியாக உள்ளார்.

    பிரதமர் பதவியே எங்களுக்கு வேண்டாம்.. ராகுல் பிரதமர் பதவியே எங்களுக்கு வேண்டாம்.. ராகுல் "எதிர்ப்பாளர்களுக்கு" காங்கிரஸ் மறைமுக மெசேஜ்!

    முயற்சி

    முயற்சி

    இதனால் சோனியா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். முதல் வேளையாக பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சியினரை சந்திக்க முடிவு செய்துள்ளார். வரும் 23-ஆம் தேதி அனைத்து கட்சியினரையும் சந்திக்க முடிவு செய்துள்ளார். மேலும் மம்தா பானர்ஜி, மாயாவதியையும் சமாதானப்படுத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

    பாஜக

    பாஜக

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு குறுக்கு வழியில் ஆட்சி பிடிப்பதை தவிர்க்க காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் மஜத தலைவர் குமாரசாமிதான் முதல்வர் என தேவகவுடாவிடம் தொலைபேசியில் சோனியா பேசி சமாதானப்படுத்தி பாஜகவின் வரவை தவிர்த்தார்.

    சோனியா அறிவிப்பு

    சோனியா அறிவிப்பு

    அதுபோல் தனது மகன் ராகுல் காந்தி பிரதமராவதை விரும்பாதவர்களுக்கு மறைமுகச் செய்தியாக தங்கள் கட்சிக்கு பிரதமர் பதவி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. எங்கள் நோக்கம் பாஜகவை வீட்டுக்கு அனுப்புவதுதான் என குலாம் நபி ஆசாத் மூலம் சோனியா அறிவித்தார்.

    அறிவிப்புகள்

    அறிவிப்புகள்

    மற்ற மாநில சட்டசபையில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் மாநில கட்சிகளை வளைத்து போட்டு பாஜக ஆட்சி நடத்துவதை போல் மத்தியில் நடந்துவிடக் கூடாது என்பதற்காக இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

    அச்சம்

    அச்சம்

    காங்கிரஸ், பாஜக என யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பிரதமர் வேட்பாளர் யார் என்பது மம்தாவும் மாயாவதியும் தீர்மானிப்பர் என்பதால் அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சோனியா எடுத்துள்ளார். பிரதமர் பதவிக்கு வர தன் மகனே விரும்பாத போது நமது முரட்டு பிடிவாதத்தால் மீண்டும் பாஜக அரசு அமைந்துவிடுமோ என்ற அச்சம் சோனியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

    சோனியா நினைப்பு

    சோனியா நினைப்பு

    3-ஆவது அணி உருவாகினால் அதில் உள்ள கட்சிகளை வைத்து பாஜக அரசியல் செய்யலாம் என்பதால் அந்த அணி உருவாகக் கூடாது என்பதில் சோனியா தெளிவாக உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் 3-ஆவது அணி உருவாகிவிட்டால் அதில் மம்தாவும் மாயாவதியும் சென்றுவிடக் கூடாது என சோனியா நினைக்கிறார்.

    காய் நகர்த்தும் சோனியா

    காய் நகர்த்தும் சோனியா

    எனவே முழு நேர அரசியலில் ஈடுபட சோனியா முடிவெடுத்துள்ளார். கருணாநிதி பாணியில் எதிரியா அவரை தூக்கி கட்சிக்குள் போடு என்பதை போல் தங்களுக்கு எதிராக உள்ள டிஆர்எஸ்ஸை தேமுகூவிற்கு வரவழைக்க சோனியா காய்களை நகர்த்தி வருகிறார்.

    English summary
    Congress is framing strategy to avoid formation of Telangana CM Chandrasekara Rao.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X