டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமர் மோடியின் பேட்டியை டிவியில் பார்த்து உடனுக்குடன் கமெண்ட் கொடுத்த ராகுல் காந்தி

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி பேசிய அதே நேரத்தில் பதிலடி கொடுத்த ராகுல் காந்தி- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடியின் பேட்டியை நேரலையாக பார்த்துக்கொண்டே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதற்கு உடனுக்குடன் விமர்சனம் செய்தார்

    தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஒய்ந்ததை ஒட்டி கடைசி நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

    இந்த பேட்டியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "தேர்தல் முடிய சில நாட்களே உள்ள நிலையில் முதல்முறையாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார். அவரை பாராட்டுகிறேன்.

    Congress leader rahul gandhi live reply after seeing modi press conference on tv

    தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் நேர்மையாக நடக்க வில்லை. இந்த தேர்தலில் மோடியும் அமித் ஷாவும் மிகப்பெரிய அளவில பண பலத்தை பயன்படுத்தி உள்ளார்கள். பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்களிடம் உள்ள உண்மைக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி என்றார்.

    அமித் ஷாவிடம் கேளுங்கள்.. என்னிடம் கேட்காதீர்கள்.. ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத மோடி! அமித் ஷாவிடம் கேளுங்கள்.. என்னிடம் கேட்காதீர்கள்.. ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத மோடி!

    அப்படியோ பேசிகொண்டிருந்த ராகுல் காந்தி, சட்டென்று டிவியில் பிரதமர் மோடியின் பேட்டி ஒளிபரப்பாவதை பார்த்து சிரித்துக்கொண்டே கடைசியில் மோடி செய்தியாளர்களை சந்தித்துவிட்டார் என கைத்தட்டி ஆரவாரம் செய்தார். அதைத்தொடர்ந்து மோடியின் பேச்சை கேட்டுக்கொண்டே அதற்கு லைவாக பதில் அளித்தார். பிரதமர் மோடி தான் பதவி காலத்தின் கடைசியில் செய்தியாளர்களை சந்தித்துவிட்டதாவும் ராகுல காந்தி கூறினார்.

    பிரதமர் மோடியின் குடும்பத்தை பற்றி தான் ஒருபோதும் விமர்சிக்க மாட்டேன் என்றும் தன் குடும்பத்தை மோடி விமர்சத்தை பற்றி கவலை இல்லை என்றும் ராகுல் காந்தி கூறினார்.

    English summary
    lok sabaha elections 2019 : Congress leader rahul gandhi live reply after seeing modi press conference on tv
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X