• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"பொய்யர்களின் தலைவர் மோடி!" ... காங்கிரஸ் தலைவர் சித்து கடும் விமர்சனம்!

|

மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் காங்கிரஸ் தலைவரான சித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"குறைந்த சப்பாத்திகளை சுட்டாலும், அண்டை வீட்டார் மத்தியில் அதிக வேலை செய்வது போல மணமான புதுப்பெண்கள் வளையல் சத்தத்தை ஏற்படுத்தி காட்டுவர். அதேபோலவே மோடியும் காட்டிக் கொள்கிறார். இதுதான் மோடி அரசாங்கத்தில் நடந்துள்ளது.

மக்களுக்கான நலனுக்காகத்தான் தேர்தலில் போராடுகிறோம். நாாட்டையே கொள்ளையடித்த பாஜகவுக்கு எதிராக அல்ல. நாட்டை பாஜக கொள்ளையடிப்பது குறித்து, எதிர்கால சந்ததியினர் எங்கள் மீது விரல் நீட்டிவிடக்கூடாது என்பதற்காக, பிரதமர் மீது ஏராளமான புகார்களை நான் எழுப்பி இருக்கிறேன்.

Congress Leader Sidhu Calls Modi is liar-in-chief

இதுவரை 6 செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடிக்கு எதிராக புகார்களை தெரிவித்துள்ளேன். ஆனால், அவர் ஒரு பிரச்னைக்கு கூட தீர்வு காணவில்லை. மேலும், கூர்ந்து பார்த்தால், பெண்கள் பாதுகாப்பு, கல்வி, பசிக் கொடுமை, விவசாயிகள் பற்றி அவர் பிரச்சாரத்தில் ஒரு வார்த்தை பேசுவதில்லை," என்று கூறினார்.

பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டதின் கீழ் பால்.. தமிழக அரசு ஆலோசனை!

டைம்ஸ் இதழ் அட்டைப்படத்தில் மோடியை பிரிவினைவாதிகளின் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளது பற்றி சித்துவிடம் செய்தியாளர்கள் வினவினர். அப்போது," பிரதமர் மோடி, பொய்யர்களின் தலைவர், பிரிவினைவாதிகளின் தலைவர், அம்பானி மற்றும் அதானிகளின் மேனேஜர் என்று நான் அழைப்பேன்," என்று காட்டமாக கூறினார்.

"பாஜக தலைமை கருப்பு தோல் கொண்ட ஆங்கிலேயர் போன்று உருவகப்படுத்தி சர்ச்சைக்குரிய கருத்தையும் சித்து கூறி இருக்கிறார். நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி காங்கிரஸ். ஆங்கிலேயரிடம் இருந்து காங்கிரஸ் கட்சியின் மவுலானா ஆஸாத் மற்றும் மஹாத்மா காந்தி சுதந்திரம் பெற்று தந்தனர்.

ஆனால், தற்போது கருப்பு ஆங்கிலேயரிடமிருந்து இந்தூர் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும். பொய்யர்கள் மற்றும் காவலாளிகளிடம் இருந்து நாட்டுக்கு நாங்கள் சுதந்திரம் பெற்றுத் தருவோம்," என்று இந்தூரில் சித்து சூளுரைத்தார்.

காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கியாக மாறி இருக்கும் சித்து தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சிக்கலில் மாட்டி வருகிறார். கடந்த மாதம் பீகார் முஸ்லீம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், 72 மணிநேரம் பிரச்சாரம் செய்ய சித்துவுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது பிரதமர் மோடி மீதான சர்ச்சைக்குரிய கருத்துக்காக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Congress leader Navjot Singh Sidhu has targeted again Prime Minister Modi and he is comparing the Prime Minister to a bride who only makes noise with bangles but doesn't make enough chapattis.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more