டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாநில உரிமை.. மாநில சுயாட்சி.. கூட்டாட்சி முக்கியத்துவம்.. கலக்கும் காங்கிரஸ் வாக்குறுதி.. அசத்தல்!

காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க மாநில சுயாட்சிக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Congress Manifesto: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கும் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க மாநில சுயாட்சிக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. முதல்முறையாக காங்கிரஸ் மத்திய ஆட்சியை விட, மாநில உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இப்படி இருக்கும் என்று யாரும் நினைத்து இருக்க மாட்டார்கள். பொதுவான அறிவிப்புகள், சில கவர்ச்சி அறிவிப்புகள் மட்டுமே இருக்கும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

    ஆனால் காங்கிரஸ் வைத்திருந்த திட்டமோ வேறு. மாநில சுயாட்சிக்கு வழிவகுக்கும் பல திட்டங்களை காங்கிரஸ் அறிவித்து இருக்கிறது. திமுக கூட்டணியில் இருப்பதால் ஏற்பட்ட மாற்றமோ, என்னவோ காங்கிரஸ் முழுக்க முழுக்க மாநில நலனுக்கான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

    பட்டியல்

    பட்டியல்

    கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவுகள் என்ற தலைப்பில் இருக்கும் அந்த பட்டியலில், முதல் வாக்குறுதியே சிறப்பான வாக்குறுதி என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்திய அரசியலமைப்பில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இத்தனை நாட்களாக இருக்கும் சில முக்கிய துறைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லப்படும்.

    திமுகவை பின்பற்றும் காங்கிரஸ்.. புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து.. ராகுல் வாக்குறுதி!திமுகவை பின்பற்றும் காங்கிரஸ்.. புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து.. ராகுல் வாக்குறுதி!

    சூப்பர் திட்டம்

    சூப்பர் திட்டம்

    அதேபோல் மத்திய அமைச்சரவை துறைகள் சுருக்கப்படும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சில அமைச்சரவை துறைகள் மாநில அரசுக்கு மாற்றப்படும். இது யாரும் எதிர்பார்க்காத வாக்குறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன திட்டங்கள்

    என்ன திட்டங்கள்

    அதேபோல் பள்ளி கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஆரோக்கியம், தண்ணீர், சுகாதாரம், மின்சாரம் முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கு செல்லும். மத்திய அரசு போதுமான உதவிகளை மட்டுமே இதில் இனி செய்யும்.

    யாருக்கு அரியணை?முடிவு செய்யுமா தமிழ்நாடு.. பரபர கருத்து கணிப்பு

    பஞ்சாயத்து துறைகள்

    பஞ்சாயத்து துறைகள்

    அதேபோல் பஞ்சாயத்து துறைகளை வலுப்படுத்துவதற்காக மீண்டும் நிறைய நிதி பஞ்சாயத்திற்கு ஒதுக்கப்படும். ஜிஎஸ்டியில் பெரும்பாலான நிதிகள் பஞ்சாயத்து முன்னேற்றத்திற்கு ஒதுக்கப்படும். நேரடியாக இந்த நிதிகள் பஞ்சாயத்திற்கு ஒதுக்கப்படும்.

    காஷ்மீர் ராணுவம்

    காஷ்மீர் ராணுவம்

    அதேபோல் காஷ்மீர் மாநில பிரச்சனையை தீர்க்க நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தப்படும். காஷ்மீரில் ராணுவம் வாபஸ் பெறப்பட்டு எல்லையில் மட்டுமே குவிக்கப்படும். காஷ்மீர் உள்ளூர் பிரச்சனைகளை காஷ்மீர் போலீஸ் மட்டுமே கவனித்துக்கொள்ளும்.

    வடகிழக்கு மாநிலம்

    வடகிழக்கு மாநிலம்

    அதேபோல் வடகிழக்கு மாநிலங்களுக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்தம் வாபஸ் பெறப்படும். இந்த இரண்டு கோரிக்கையும் வடகிழக்கு மாநில மக்களால் நீண்ட நாட்களாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அட சூப்பர்

    அட சூப்பர்

    அதேபோல் ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும். யூனியன் பிரதேசங்களுக்கான அதிகாரங்களில் திருத்தம் செய்யப்படும் என்று முழுக்க முழுக்க மாநில நலன் சார்ந்த தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் அறிக்கை அமைந்து இருக்கிறது.

    English summary
    Congress Party Manifesto focuses mainly on Federalism and Centre-State Relations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X