டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் 5 முக்கிய அம்சங்கள் இவைதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Congress Manifesto: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 முக்கிய அம்சங்கள் ஆதாரமாக கொள்ளப்பட்டுள்ளது.

    லோக்சபா தேர்தலையொட்டி காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அப்போது பேசிய அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி, 5 முக்கிய அம்சங்களை ஆதாரமாக கொண்டு இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    Congress manifesto to focus on five main themes

    நாங்க ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை இதுதான்.. பாஜகவை எச்சரிக்கும் காங். தேர்தல் அறிக்கை நாங்க ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை இதுதான்.. பாஜகவை எச்சரிக்கும் காங். தேர்தல் அறிக்கை

    அந்த 5 அம்சங்கள் இவைதான்:

    • நியாய் திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள ஏழை மக்களுக்கு வருடத்திற்கு குறைந்தபட்சமாக ரூ.72,000 வழங்கப்படும்.
    • அரசுப் பணிகளில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். பஞ்சாயத்துகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு உருவாக்கப்படும். புதிதாக தொழில் தொடங்குவோர் முதல் 3 வருடங்களுக்கு எந்தவிதமான அனுமதியும் பெற வேண்டியதில்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 150 நாட்களாக வேலை நாட்கள் உயர்த்தப்படும்.
    • விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடனை திரும்ப செலுத்தாத விவசாயிகள் கிரிமினல் குற்றவாளிகளாக பார்க்கப்பட மாட்டார்கள். சிவில் குற்றமாக மட்டுமே பார்க்கப்படும்.
    • கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% நிதி ஒதுக்கப்படும். தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தவிர்த்து, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் பலப்படுத்தப்படும்.
    • தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கு கூடுதல் அக்கறை செலுத்தப்படும்.

    இவைதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அடிப்படையான 5 அம்சங்களாகும்.

    English summary
    22 lakh government vacancies will be filled. 10 lakh jobs in panchayats. Entrepreneurs won't need any permission for starting business in 3 years. 150 days of work gauranteed under NREGA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X