டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிரிக்கெட்டில் மட்டுமல்ல ஜனநாயகத்திலும் தோற்ற இந்தியா.. ப.சிதம்பரம் விமர்சனம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜனநாயகம் தினமும் அடிவாங்கி வருகிறது என கர்நாடகா, கோவா சூழலை சுட்டிக் காட்டிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மாநிலங்களவையில் பேசினார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த நிலையில் இக்கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். எனினும் இவர்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் ஆளும் கட்சியின் தற்போதைய பலம் 99ஆக உள்ளது. பாஜகவின் பலமோ 105-ஆக உள்ளது. ஒருவேளை 16 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் ஆட்சி கவிழும். எனவே பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரி வருகிறது.

'2 அடி நடந்தா கேலரிக்கு போயிடலாம்'2 அடி நடந்தா கேலரிக்கு போயிடலாம்".. லோக்சபாவில் அரட்டை அடித்த எம்பிக்களிடம் சபாநாயகர் டென்சன்

அக்கட்சிக்கு

அக்கட்சிக்கு

அது போல் கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் நேற்று இரவு திடீரென பாஜகவில் இணைந்தனர். அதாவது அக்கட்சிக்கு மொத்தமுள்ள 15 எம்எல்ஏக்களில் 10 பேர் பாஜகவில் ஐக்கியமாகி அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

பட்ஜெட்டில் இல்லை

இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மாநிலங்களவையில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் மகிழ்ச்சியான தருணங்களில் பேசுவதற்கு மிகவும் விரும்புகிறேன். நாட்டின் மொத்த வருமானம் குறித்து பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

வேலையில்லா திண்டாட்டம்

வேலையில்லா திண்டாட்டம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. மாற்றங்கள் செய்வது எல்லாமே சீர்திருத்தமாகாது. துறைவாரியான ஒதுக்கீட்டு விவரங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.
வேலையில்லா திண்டாட்டத்துக்கு சிறந்த உதாரணம் சொல்வதானால் 62 ஆயிரம் கலாசி பதவிகளுக்கு 82 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

முதுகலை பொறியியல் பட்டதாரிகள்

முதுகலை பொறியியல் பட்டதாரிகள்

அவர்களுள் 4 லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகள், 40 ஆயிரம் பேர் எம்இ படித்தவர்கள். கர்நாடகம், கோவாவில் நிலவும் அரசியல் சூழலை பார்க்கும் போது ஜனநாயகம் தினமும் அடிவாங்கி வருகிறது என்று கூறினார்.

English summary
Congress MP P Chidambaram in Rajya Sabha: I wish I was speaking under happier circumstances. I'm not unhappy only because India lost cricket match yesterday, I'm very unhappy that democracy is suffering a blow every day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X