டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறப்பு விருந்தினர்தான் இல்லையே...குடியரசு தின விழாவை கேன்சல் பண்ணுங்க...சசி தரூர் கோரிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின், இந்திய குடியரசு தின வருகை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், குடியரசு தினக் கொண்டாட்டத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்தியப் பயணத்தை ரத்து செய்வதாக போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடியிடம் போன் மூலம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Congress MP. Sasi Tharoor raised the question why not cancel the Republic Day celebrations?

நாடு முழுவதும் வருகிற 26-ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் முக்கிய விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்தியப் பயணத்தை ரத்து செய்வதாக போரிஸ் ஜான்சன், பிரதமர் மோடியிடம் போன் மூலம் தெரிவித்தார்.

அமெரிக்காவில்.. ஜனநாயக கட்சி நான்சி பெலோசி, குடியரசு கட்சி மிட்ச்யோ மெக்கானெல் வீடுகள் அவமதிப்பு! அமெரிக்காவில்.. ஜனநாயக கட்சி நான்சி பெலோசி, குடியரசு கட்சி மிட்ச்யோ மெக்கானெல் வீடுகள் அவமதிப்பு!

குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினர் இல்லாததால் குடியரசு தின விழாக்களை முழுவதுமாக ஏன் ரத்து செய்யக் கூடாது? என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், இப்போது போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை கொரோனா இரண்டாம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று நமக்கு ஒரு முக்கிய விருந்தினர் இல்லை.

ஏன் ஒரு படி மேலே சென்று குடியரசு தின விழாக்களை முழுவதுமாக ரத்து செய்யக் கூடாது?. வழக்கம் போல் அணிவகுப்பை உற்சாகப்படுத்தக் கூட்டம் வருவது பொறுப்பற்றது என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

English summary
why not cancel the Republic Day celebrations? That Congress MP. Sasi Tharoor has raised the question
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X