டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்.. ஆம் ஆத்மியுடன் நோ கூட்டணி

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காமல் தனித்தே களம் இறங்கியுள்ளது.

டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது

Congress not alliance with AAP, declared names for six out of seven seats in Delhi

லோக்சபா தேர்தல்... எந்த வேட்பாளருக்கு எவ்வளவு சொத்து.. இதை கிளிக் பண்ணுங்க தெரியும்!

டெல்லி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி விரும்பியது. இது தொடர்பாக இருகட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

இந்நிலையில், தொகுதி உடன்பாடு, ஹரியானாவில் போட்டியிடவேண்டும் என ஆம் ஆத்மியின் விருப்பம் போன்றவற்றால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி டெல்லி மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது, தெற்கு டெல்லியை தவிர 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

பிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட் பிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ஞாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்

இதன்படி சாந்தினி சௌன் தொகுதியில் ஜேபி அகர்வால் போட்டியிடுகிறார். வடகிழக்கு டெல்லி தொகுதியில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் போட்டியிடுகிறார். கிழக்கு டெல்லியில் அரவிந்தர் சிங் லௌலியும், புது டெல்லி தொகுதியில் அஜய் மாக்கனும் போட்டியிடுகிறார்கள்.

வட மேற்கு டெல்லியில் ராஜேஸ் லிலோத்தாவும், மேற்கு டெல்லியில் மஹாபால் மிஸ்ரா போட்டியிடுகிறார். தெற்கு டெல்லியில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இங்கு ராஜ்குமார் சௌன் அல்லது சுஷில் குமார் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

English summary
The Congress declared names of its candidates for six out of seven seats in Delhi, the party not allaince with AAP
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X