டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாருக்கு ஜாக்பாட் காத்திருக்கோ.. பாஜகவை வீழ்த்த இறங்கி அடிக்கத் தயாராக இருக்கும் காங்கிரஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவை வீழ்த்த இறங்கி அடிக்கத் தயாராக இருக்கும் காங்கிரஸ்- வீடியோ

    டெல்லி: மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்ற கருத்துக்கணிப்புகளால் சந்தோஷத்தில் இருக்கும் பாஜகவுக்கு, மே 23ம் தேதி மிகப்பெரிய அதிர்ச்சி கொடுக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

    நாடு முழுவதும் 542 தொகுதிகளில் (வேலூர் தவிர) மக்களவை தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வென்று மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் என்றும் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் தேசிய ஊடகங்கள் சொல்லி வைத்துபோல் கணிப்புகளை வெளியிட்டு உள்ளன.

    மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ள நிலையில், அன்று எதிர்க்கட்சிகளை கூட்டி ஆலோசனை செய்யலாம் என காங்கிரஸ் நினைத்திருந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளால் அதிர்ச்சி அடைந்துள்ளது.

    புதிய சக்திகளாக உருவெடுக்கும் கமல், டிடிவி, சீமான்.. கருத்து கணிப்புகள் சொல்லும் சேதி இதுதான்! புதிய சக்திகளாக உருவெடுக்கும் கமல், டிடிவி, சீமான்.. கருத்து கணிப்புகள் சொல்லும் சேதி இதுதான்!

     சமரச திட்டம்

    சமரச திட்டம்

    இந்த கணிப்புகளை காங்கிரஸ் கட்சி முற்றிலும் நிராகரித்துள்ள போதிலும், ஒருவேளை பாஜக அதிக இடங்களில் வென்றால், அதனை வீழ்த்த எந்த சமரச திட்டத்தையும் ஏற்க காங்கிரஸ் தயராகவே இருக்கிறதாம்.

     அதிரடி திட்டம்

    அதிரடி திட்டம்

    கணிப்புகளால் பாஜக பக்கம் எதிர்க்கட்சிகள் தாவாமல் இருக்க, சந்திரபாபு நாயுடுவை வைத்து பேசிவரும் காங்கிரஸ், சில அதிரடியாக திட்டங்களையும் கைவசம் வைத்திருப்பதாக தெரிகிறது. இதன்படி பாஜக ஒருவேளை கணிப்புகளின் படி அதிக இடங்களை வென்றால் ஒன்றும் செய்யமுடியாது. அதாவது பாஜக 230 இடங்களை தாண்டி வென்றுவிட்டால், அந்தகட்சி ஆட்சி அமைப்பதை தடுக்க ஒன்றுமே செய்ய முடியாது என காங்கிரஸ் நம்புகிறது.

     தலைமை யாரு

    தலைமை யாரு

    அதேநேரம் 230 இடங்கக்கு கீழ் பாஜக பெற்று, காங்கிரஸ் 100 இடங்கள் வரையே பெறும் என்ற சூழ்நிலை வந்தால், பிரதமர் வேட்பாளராக ராகுலை நிறுத்துவது கடினம் என்பதால் பலமான எதிர்க்கட்சியில் ஒருவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, ஆதரவு தரவும் காங்கிரஸ் தயாராகவே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

     பிரதமர் யார்

    பிரதமர் யார்

    இதன் மூலம் பிரதமர் பதவி ஆசையில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து ஒரு சமரச திட்டத்தை ஏற்க வைக்க முடியும் என்றும், பாஜக ஆட்சிக்கு வருவது கர்நாடகா பாணியில் தடுக்க முடியும் என்றும் காங்கிரஸ் பலமாக நம்பவுதாக தெரிகிறது. எனினும் மே 23ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் போது, தங்கள் கட்சியே அதிக இடங்களில் வெல்லும் என்றும், ராகுல் தான் பிரதமர் ஆவார் என்றும் காங்கிரஸ் ஆழமாக நம்பி வருகிறது.

    English summary
    lok sabha elections 2019 : congress plans to give driver seat to opposition parties for stop bjp rule
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X