டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரபேலில் முழுமையாக ஆவணங்கள் திருடு போகவில்லை.. பாதிதான் மிஸ்ஸானது.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதி ஆவணங்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது, உண்மையான முழு ஆவணங்கள் வெளியாகவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரபேலில் ஆவணங்கள் முழுமையாக திருடு போகவில்லை - நிர்மலா சீதாராமன்- வீடியோ

    டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதி ஆவணங்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது, உண்மையான முழு ஆவணங்கள் வெளியாகவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.

    ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தி இந்து இதழில் வெளியான ஆதாரங்களை ஏற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.

     பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி! பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி!

    நிர்மலா சீதாராமன் பேட்டி

    நிர்மலா சீதாராமன் பேட்டி

    நிர்மலா சீதாராமன் தனது பேட்டியில், காங்கிரஸ் தலைவர் இந்த ஆவணங்களில் பாதியை கூட படித்து இருக்க மாட்டார். ஆனால் அதற்குள் எதோ முழு தீர்ப்பு வந்துவிட்டது போல பேசுகிறார். அதேபோல் ''காவலாளிதான் திருடன் ('Chowkidaar chor hai,')'' என்று நீதிமன்றமே கூறிவிட்டதாக ராகுல் காந்தி கூறுகிறார். ரபேல் குறித்த ராகுலின் கருத்துக்கள் எல்லாம் நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

    அனில் அம்பானி

    அனில் அம்பானி

    அனில் அம்பானி மோடிக்கு பணம் கொடுத்ததாக ராகுல் காந்தி கூறுகிறார். நீதிமன்றம் அப்படி கூறவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு. நீதிமன்றம் அப்படி சொன்னதற்கு ஆதாரம் இருக்கிறதா? நீதிமன்றம் சொல்லாத ஒரு விஷயத்தை ராகுல் காந்தி சொல்வது மிகப்பெரிய அவமதிப்பு.

    ரபேல் உண்மை

    ரபேல் உண்மை

    ரபேல் குறித்த முழு ஆவணங்கள் வெளியாகவில்லை. சில ஆவணங்களை மட்டுமே வெளியிட்டு இருக்கிறார்கள்; அதுவும் ஆவணங்களை கட் செய்து முழுமையாக வெளியிடாமல் மறைத்து இருக்கிறார்கள். ரபேல் ஆவணங்கள் சட்ட விரோதமான முறையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    என்ன ஆவணங்கள்

    என்ன ஆவணங்கள்

    ரபேல் ஒப்பந்தத்தில் சில குறிப்பிட்ட ஆவணங்கள் மட்டுமே திருடப்பட்டு இருக்கிறது. நாங்கள் மக்களை தவறாக வழி நடத்தவில்லை. நாங்கள் நீதிமன்றத்தில் பொய் சொல்லவில்லை. ஆனால் நாங்கள் பொய் சொல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டுகிறது. காங்கிரஸ்தான் மக்களை தவறாக வழி நடத்துகிறது, என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

    English summary
    Defence Minister Nirmala Sitharaman: We all know Congress president probably doesn't even read even half a paragraph, but here, by saying that the court has accepted and by also saying that the court has said 'Chowkidaar chor hai,' these verge on contempt of court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X