டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விபத்தில் சிக்கிய பத்திரிகையாளர்.. காரில் ஏற்றி, ரத்தத்தை துடைத்து விட்ட ராகுல் காந்தி! வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

டெல்லி: சாலை விபத்தில் காயமடைந்த ஒரு பத்திரிகையாளரை தகுந்த நேரத்தில் காரில் அழைத்து சென்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற உதவியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ராஜேந்திர வியாஸ். இவர் மத்திய டெல்லிக்கு உட்பட்ட ஹுமாயூன் சாலையில் விபத்தில் சிக்கி, ரத்த காயங்களுடன் துடித்துள்ளார்.

Congress president Rahul Gandhi rescued injured journalist

அப்போது அந்த வழியாக ராகுல் காந்தி காரில் சென்றுள்ளார். ஒரு நபர் அடிபட்டு கஷ்டப்படுவதை கண்ட ராகுல் காந்தி, தனது காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். இசெட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருந்தாலும், சாலையிலேயே காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய ராகுல் காந்தி, காயம்பட்டவரை தனது காரில் ஏற்றியுள்ளார்.

புதிய தொழிலுக்கு 3 வருடங்கள் எந்த அனுமதியும் தேவையில்லை.. ராகுல் காந்தியின் அடுத்த அதிரடி அறிவிப்பு புதிய தொழிலுக்கு 3 வருடங்கள் எந்த அனுமதியும் தேவையில்லை.. ராகுல் காந்தியின் அடுத்த அதிரடி அறிவிப்பு

இதன்பிறகு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு காரை செலுத்துமாறு ராகுல் காந்தி டிரைவரிடம் வலியுறுத்தியுள்ளார். அவரும் எய்ம்ஸ் நோக்கி காரை செலுத்தினார். அப்போது, காயமடைந்த பத்திரிகையாளரின் நெற்றியில் இருந்த காயத்திலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதை, ராகுல் காந்தி, துடைத்துள்ளார். அந்த பத்திரிக்கையாளருக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.

இந்த காட்சியை, காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்த ராகுல் காந்தியின், உதவியாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். எனவே சமூக வலைத்தளங்களில் இந்த உதவிக்கு பெரும் பாராட்டு கிடைத்து வருகிறது. அதேநேரம், உதவியாளர் வீடியோ எடுத்தது தவறு என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

English summary
Congress president Rahul Gandhi rescued a journalist who met with a road accident on Humayun road in New Delhi area on Wednesday afternoon. The injured journalist was taken to AIIIMS by him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X