டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நமோ டிவி.. மோடி ஆர்மி.. கேதார்நாத் நாடகம்.. நல்லா பண்றீங்க தேர்தல் ஆணையம்.. ராகுல் கோபம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக கூட்டணிக்கே வெற்றி ! சி வோட்டர் அதிரடி கணிப்பு!

    டெல்லி: மோடி மற்றும் அவரது குழுவிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்து விட்டது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி காட்டமாக கூறியுள்ளார்.

    பிரதமர் மோடியின் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பயணம் எதிர்க்கட்சிகளுக்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்த நிலையில் பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை கேதார்நாத் கோவிலுக்கு சென்றார்.

    அவர் அங்கு மேற்கொண்ட 18 மணி நேர தியானம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் பிரதமர் மோடி கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்தில் அரசு அலுவல்களையும் மேற்கொண்டார். செய்தியாளர்களையும் சந்தித்தார் பிரதமர் மோடி.

    கணிப்புகளை நம்ப மாட்டோம்... மே 23ம் தேதி வரை காத்திருங்க 'சர்ப்ரைஸ்' இருக்கு.. காங்கிரஸ் கணிப்புகளை நம்ப மாட்டோம்... மே 23ம் தேதி வரை காத்திருங்க 'சர்ப்ரைஸ்' இருக்கு.. காங்கிரஸ்

    புகார்

    புகார்

    இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மோடியின் கேதார்நாத் பயணம் தேர்தல் விதிமீறல் என தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளன.

    விமர்சனம்

    விமர்சனம்

    மேலும் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பிரதமர் மோடி கேதார்நாத் சென்றதையும், அதற்கு தொலைக்காட்சி சேனல்கள் முக்கியத்துவம் அளித்ததையும் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளன.

    நமோ டிவி

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தேர்தல் பத்திரங்கள், மின்னணு எந்திர வாக்குப்பதிவை அமல்படுத்தியதில் இருந்து தேர்தல் தேதியை நிர்ணயித்தது, நமோ டி.வி.யை அனுமதித்தது, மோடியின் ராணுவம் என்ற பேச்சை ஏற்றுக்கொண்டது.

    சரணடைந்துவிட்டது

    சரணடைந்துவிட்டது

    இப்போது, கேதார்நாத்தில் நடந்த நாடகம் வரை தேர்தல் கமிஷன், மோடி மற்றும் அவரது குழு முன்பு சரணடைந்துவிட்டது, எல்லா இந்தியர்களுக்கும் தெளிவாக தெரிந்துவிட்டது. தேர்தல் ஆணையம், அச்சத்துடனும், மரியாதையுடனும் பார்க்கக்கூடியதாக முன்பு இருந்தது. இனிமேல் அப்படி இருக்காது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    English summary
    Congress Presindent Rahul Gandhi slams election commission for allowing Modi to meet press. Rahul twitted From Electoral Bonds & EVMs to manipulating the election schedule, NaMo TV, “Modi’s Army” & now the drama in Kedarnath; the Election Commission’s capitulation before Mr Modi & his gang is obvious to all Indians.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X