டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 வழங்கப்படும்.. காங். அதிரடி வாக்குறுதி.. ராகுல் காந்தி மாஸ்டர் ஸ்டிரைக்!

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் குறைந்தபட்ச வருமானம் ரூ.6000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 வழங்கப்படும்... ராகுல் காந்தியின் அதிரடி திட்டம்- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் குறைந்தபட்ச வருமானம் ரூ.6000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்து இருக்கிறார்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில வாரங்களுக்கு முன் வாக்குறுதி அளித்து இருந்தார். அது குறித்த முழு விவரங்களை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.

    லோக்சபா தேர்தல் இப்போது களைகட்ட தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கான மிக முக்கியமான வாக்குறுதி ஒன்றை அளித்து இருக்கிறது.

    தினகரனுக்கு குக்கர் சின்னம் கொடுக்குறதுல என்னதான் பிரச்னை... உச்சநீதிமன்றம் கேள்விதினகரனுக்கு குக்கர் சின்னம் கொடுக்குறதுல என்னதான் பிரச்னை... உச்சநீதிமன்றம் கேள்வி

    குறைந்தபட்ச வருமானம்

    குறைந்தபட்ச வருமானம்

    குறைந்தபட்ச வருமானம் என்பதை ஆங்கிலத்தில் Minimum Basic Income என்று அழைப்பார்கள். இதன்படி என்ன வேலை பார்த்தாலும், எந்த பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழ்மையான குடும்பங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ஒன்று வழங்கப்படும். இது உலகில் சில நாடுகளில் மட்டும் நடைமுறையில் உள்ளது.

    காங்கிரஸ் கொண்டு வருகிறது

    காங்கிரஸ் கொண்டு வருகிறது

    இதைத்தான் காங்கிரஸ் கொண்டு வர உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எவ்வளவு ரூபாய் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    எவ்வளவு ரூபாய்

    எவ்வளவு ரூபாய்

    காங். ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் குறைந்தபட்ச வருமானம் ரூ.6000 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். 5 கோடி குடும்பம் இதனால் பயன் அடையும். 25 கோடி ஏழை மக்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள். ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் 20% பேர் ஊதிய உறுதித் திட்டதால் பயன்பெறுவர், என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    எந்த குடும்பம்

    எந்த குடும்பம்

    மாதம் 12,000 கீழ் சம்பாதிக்கும் குடும்பங்கள் இந்த வருமானத்தை பெற தகுதியானவர்கள். இவர்களின் ஊதியத்தை ஈடுகட்டுவதற்காக மாதம் இந்த 6000 ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் வருடம் இவர்கள் ரூ.72000 ரூபாய் பெறுவார்கள்.

    எப்படி அளிக்கப்படும்

    எப்படி அளிக்கப்படும்

    இந்த பணம் நேரடியாக மக்களின் வங்கி கணக்கிற்கு அளிக்கப்படும். மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தால் தானாக பணம் அவர்களின் வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். இது தொடர்பாக அவர்கள் யாரிடமும் பணம் கேட்டு மாதம்தோறும் விண்ணப்பிக்க வேண்டியது கிடையாது.

    உலகில் இல்லை

    உலகில் இல்லை

    உலகில் இது போன்ற வகையில் அதிகமாக வருமானம் கொடுக்கும் நாடுகள் எதுவும் கிடையாது. எல்லா கணக்கும் செய்து பின் இதை செயல்படுத்த முடியும் என்பதால்தான் இந்த திட்டத்தை அறிவித்து இருக்கிறோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

    English summary
    Congress promises Minimum Basic Income of 6,000 Rs. for poor ahead of Lok Sabha Election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X