டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் அறிக்கையை நம்பிய காங். படுதோல்வி.. ஆனால் பாஜகவுடையது மட்டும் எப்படி ஜெயிச்சுச்சு!

Google Oneindia Tamil News

டெல்லி: ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம், விவசாய கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறதி அளித்தது. அதேநேரம் பாஜக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவி தொகை தருவதாக மட்டுமே அறிவித்தது. கடன் தள்ளுபடி அறிவிக்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகளின் படி பார்த்தால் காங்கிரசின் வாக்குறுதிகளே சூப்பர். அப்படியும் இருந்தும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த மக்களவை தேர்தலில் தேர்தல் வாக்குறுதிகள் எடுபடாமல் போனது ஏன் என்பதை இப்போது பார்க்கலாம்.

மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நொடியே ஒவ்வொரு கட்சிகளும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வெளியிடும்.

அந்த வகையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடசியும் இந்த முறை பல கவரச்சிகரமான வாக்குறுதிகளை வெளியிட்டது. குறிப்பாக காங்கிரஸ் வெளியிட்ட வாக்குறுதிகள் ஆச்சர்யம் தரும் விஷயமாகும். ஆனால் அப்படி இருந்து காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துளளது.

பாஜக வாக்குறுதி

பாஜக வாக்குறுதி

காங்கிரஸ் கட்சி ப சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிட்டு இருந்தது. அதில் மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்த பட்ச வருவாயாக மக்களுக்கு வழங்குவது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது, நீட் தேர்வு ரத்து உள்ளிட்டவை இடம் பெற்று இருந்தன. ஆனால் பாஜக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்தது.

ஆச்சர்ய முடிவுகள்

ஆச்சர்ய முடிவுகள்

தேர்தல் வாக்குறுதிகள் ஏன் ரிசல்ட்டில் எடுபடாமல் போனது என்ற கேள்விகள் எழுகின்றன. அதேநேரம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் அளிக்காமலேயே பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றதும் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்து இருக்கும்.

நிரூபித்த பாஜக

நிரூபித்த பாஜக

5 ஆண்டு மோடியின் ஆட்சியில் அதிருப்திகள் உருவாகி மக்கள் தங்களுக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள் என நம்பி காங்கிரஸ் வெளியிட்ட கவர்ச்சிகரமாக வாக்குறுதிகளை மக்கள் ஏற்காமல் போனது நிச்சயம் ஆச்சர்யமான ஒன்று தான். அதேநேரம் தேர்தல் வாக்குறுதிகளை தாண்டி, தேர்தல் வியூகங்களே முக்கியம் என்பதை பாஜக நிரூபித்துவிட்டது.

துள்ளிய தாக்குதல்

துள்ளிய தாக்குதல்

யார் வேட்பாளராக நிறுத்த வேண்டும். யார் எதிர்ப்பார்கள். யார் உள்ளடி வேலை செய்வார்கள். எங்கு எந்த ஜாதி மக்கள் இருக்கிறார்கள். எந்த கட்சிக்கு ஆதரவாக எந்த ஜாதி, எந்த மதத்தின் மக்கள் இருக்கிறார்கள் என்பதை துள்ளியமாக அறிந்து சரியான வியூகத்தை பாஜக வகுத்ததே வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஒன்றுதிரட்டிய பாஜக

ஒன்றுதிரட்டிய பாஜக

வட இந்தியாவில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறக்காரணம் அந்த கட்சியின் இந்துத்துவா சிந்தாந்ததமே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்துத்துவா என்றால் இந்துக்கள் அனைவரையும் ஒர் அணியாக திரட்டுவது. அப்படி அனைவரையும் ஒற்றுமையாக்குவதில் வெற்றி பெற்றதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பாகிஸ்தானுக்கு பாடம்

பாகிஸ்தானுக்கு பாடம்

இதேபோல் இன்னொரு விஷயம், குறைந்த பட்ச அடிப்படை தேவைகளான மின்சாரம், கேஸ் அடுப்பு, கழிவறை, உள்ளிட்ட வசதிகளைக கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பாஜக பூர்த்தி செய்திருந்தது. இதுவும் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மற்றபடி பாகிஸ்தானுக்கு தக்க பாடத்தை மோடியால் மட்டுமே முடியும் என்றும் வடஇந்தியர்கள் முழுமையாக நம்புவதும் ஒரு காரணம்.

பொருளாதார மேதைகள்

பொருளாதார மேதைகள்

இதைஎல்லா வற்றையும் கூட்டி கழித்து பார்த்தால் காங்கிரஸ் கட்சி பொருளாதாரத்தை பற்றி மட்டும் சிந்தித்து தேர்தல் அறிக்கையை தயாரித்துவிட்டு, தேர்தல் வியூகத்திலும், எதிர்க்கட்சிகளின் வியூகங்களை முறியடிப்பதிலும் கோட்டைவிட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

English summary
why congress heavy loss after released good manifesto in lok sabha polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X