டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாக் டவுன் தேவைதான்.. ஆனால் பிளான் இல்லை.. பசியில் தவிக்கும் மக்கள்.. மனசு உடைகிறது.. சோனியா காந்தி

லாக்டவுன் செயல்பாடு குறித்து சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: "21 நாட்கள் லாக் டவுன் கட்டாயம் தேவைதான்.. ஆனால் இந்த நடவடிக்கை சரியாக திட்டமிடப்படவில்லை.. மக்களிடையே குழப்பமும், வேதனையும்தான் அதிகரித்துள்ளது" என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசு மீது பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி உள்ளார்... லட்சக்கணக்கான ஏழை தொழிலாளர்கள் தங்குவதற்கு இடமில்லாமல்.. சாப்பாடு இல்லாமல், தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்வது மனசை உடைக்கிறது" என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா தொற்று பரவலுக்கு முஸ்லிம்கள் காரணமா? தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜவாஹிருல்லா ஆவேசம்

    காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் டெல்லியில் இன்று நடைபெற்றது.. இதில் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், ஏகே அந்தோணி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துரையாடினார்... அப்போது அவர் லாக்டவுன் நடவடிக்கை குறித்து விமர்சித்ததுடன், டாக்டர்கள், ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரின் நலன் காக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் விரிவாக பேசினார். சோனியா காந்தி பேசியதாவது:

    தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 309ஆக உயர்வு தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 309ஆக உயர்வு

    விளிம்பு நிலை மக்கள்

    விளிம்பு நிலை மக்கள்

    "கொரோனாவைரசால் நாடு எப்பவுமே இல்லாத சுகாதார, மனிதநேய சிக்கலில் தவித்து வருகிறது... நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் இதிலிருந்து நம்மால் மீள முடியும். நாட்டிலுள்ள காங்கிரஸ் முன்னணி அமைப்புகள், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றுகூடி விளிம்பு நிலை மக்களுக்கும், ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.

    லாக் - டவுன்

    லாக் - டவுன்

    ஏழைகளும், சமூகத்தில் பின்தங்கி இருக்கும் மக்களும் இந்த கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்... இப்படி ஒரு கடினமான காலத்தில் நாம் ஒற்றுமையாக இருந்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.. இந்த 21 நாட்கள் லாக்-டவுன் தேவையான ஒன்றுதான்.. ஆனால் மத்திய அரசு எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் நடைமுறைப்படுத்திவிட்டது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள், புலம்பெயர்ந்து தங்கள் சொந்த ஊருக்கு சாப்பாடு இல்லாமல், தங்குவதற்கு இடமும் செல்லாமல் செல்வது மனதை பிசைகிறது.. லட்சக்கணக்கான ஏழைகள், தொழிலாளர்களிடையே இது பெரும் குழப்பத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    பாதுகாப்பு உபகரணங்கள்

    பாதுகாப்பு உபகரணங்கள்

    அவர்களுக்கு உதவும் நல்ல உள்ளங்களுக்கு என் நன்றியையும் சொல்லி கொள்கிறேன்.. கொரோனா வைரஸை பொறுத்தவரை இன்னும் மருந்தே கண்டுபிடிக்கவில்லை. தொடர் பரிசோதனைகள் மூலமே கண்காணிக்கப்படுகிறது... நம்முடைய டாக்டர்கள், நர்ஸ்கள், மற்ற சுகாதார பணியாளர்கள் என இவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும்.. மாஸ்க்குகள், பாதுகாப்பு உபகரணங்கள், போதுமான ஆஸ்பத்திரிகள், பெட்-கள், இவை எல்லாம் தேவையான அளவுக்கு இருக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

    விவசாயிகள்

    விவசாயிகள்

    இதுபோன்ற கட்டமைப்பு வசதிகள் இல்லாததால்தான் கொரோனாவைரஸ் அதிகமாக பரவிவிட்டது என்ற காரணம் இல்லாமல் அரசு பார்த்து கொள்வது ரொம்பவும் முக்கியம். அதேபோல, விவசாயிகளுக்கு எல்லாம் கிடைத்து வருகிறதா என்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.. அடுத்து வரும் கரீப் பருவ விவசாயத்துக்காக விவசாயிகளுக்குத் தேவையான உரம், பூச்சிகொல்லி மருந்துகள் போன்றவை எளிதாக கிடைக்கவும் உறுதிசெய்ய வேண்டும்.

    பொருளாதார சரிவு

    பொருளாதார சரிவு

    நடுத்தர, சிறு தொழில்கள் தற்போது கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.. இவர்களுக்கான சிறப்பு திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும்.. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொருளாதாரரீதியாக நிவாரணம் அளி்க்கும் வகையில் குறைந்தபட்ச பொது நிவாரணத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும்கொரோனா வைரஸ் காரணமாக நாடு ஒரு மிகப்பெரிய பொருளாதார சரிவை எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.

    English summary
    congress senior leader sonia gandhi says unplanned implementation of lockdown
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X