டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாரணாசியில் போட்டியிடும் பிரியங்காவை போட்டியிட வைக்காததன் பின்னணியில் பக்கா பிளானுடன் காங்கிரஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடாததற்கு பின்னால் பெரிய பிளான் அடங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் அரசல் புரசலாக பேசி கொள்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அமேதியிலும், வயநாட்டிலும் போட்டியிடுகிறார். அவரது தங்கை பிரியங்கா காந்தி தற்போது நேரடி அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார்.

இந்த நிலையில் சோனியாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பிரியங்கா, ரே பரேலியில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் அது போல் எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து அவர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

தி கிரேட் காளி பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடாது... திரிணாமுல் காங்கிரஸ் புகார் மனு தி கிரேட் காளி பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடாது... திரிணாமுல் காங்கிரஸ் புகார் மனு

உறுதி இல்லை

உறுதி இல்லை

அதனால்தான் காசியில் தனது முதல் பிரசாரத்தை பிரியங்கா தொடங்கியதாகவும் கூறப்பட்டது. எல்லா தகவல்களும் யூகமாகத்தான் கூறப்படுகின்றனவே தவிர எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

சொந்த முடிவு

சொந்த முடிவு

இந்த நிலையில் பொத்தி பொத்தி வைத்திருந்த வாரணாசி தொகுதியில் அஜய் ராய் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. பிரியங்கா குறித்து கேட்டதற்கு அது அவரது சொந்த முடிவு என காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது.

உறுதி

உறுதி

ஆனால் இதன் பின்னால் பயங்கரமான பிளான் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். அதாவது வாரணாசியை பொருத்தவரை மோடி வலுவான வேட்பாளராக இருக்கிறார். எனவே அவரை எதிர்த்து பிரியங்கா போட்டியிட வைப்பதன் மூலம் அவரது முதல் அரசியல் நுழைவு தோல்வியில் முடிந்துவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

பிரியங்கா

பிரியங்கா

தற்போது ராகுல் போட்டியிடும் அமேதி, வயநாடு தொகுதிகளில் வெற்றி பெற்றால் வயநாடு தொகுதியை ராகுல் தக்க வைத்து கொண்டு அமேதியை அவர் ராஜினாமா செய்வார். அப்போது அமேதியில் பிரியங்காவை போட்டியிட வைக்கலாம் என்பதே காங்கிரஸின் திட்டமாகும்.

English summary
Here are the reasons why Congress not fields Priyanka Gandhi in Varanasi against Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X