டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

களத்திற்கு வந்தார் ராகுல் காந்தி.. டெல்லியில் நாளை காங்கிரஸ் தர்ணா.. சோனியாவும் வருகிறார்

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நாளை மாபெரும் தர்ணா போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதியில் ராகுல்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த கட்சி என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Congress to hold a dharna at Raj Ghat, tomorrow against Citizenship Amendment Act

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல முன்னணி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசு முறை பயணமாக ராகுல் காந்தி வெளிநாடு சென்று திரும்பியுள்ள நிலையில் முதல் முறையாக அவரும் போராட்டக்களம் வர உள்ளார். ஏற்கனவே இரண்டு முறை டெல்லியில் பிரியங்கா காந்தி குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தியுள்ள நிலையில் இப்போது ராகுல் காந்தியும் இணைய உள்ளதால் டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ள தயங்குவது ஏன்? பின்னணி இதுதான்திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ள தயங்குவது ஏன்? பின்னணி இதுதான்

காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியை நோக்கி குவிய தொடங்கியுள்ளனர். அதேநேரம், ராகுல் காந்தி வருகைக்காக காங்கிரஸ் தலைமை காத்துக் கொண்டு இருந்து இப்போதுதான் முழு வீச்சில் களமிறங்குகிறது என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.

English summary
Congress to hold a 'dharna' at Raj Ghat, tomorrow from 2 pm to 8 pm, against Citizenship Amendment Act and National Register Of Citizens. Party's interim President Sonia Gandhi and Rahul Gandhi to also take part.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X