டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாட்டு மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்... காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் #Demonetisation

Google Oneindia Tamil News

Recommended Video

    பணமதிப்பு நீக்கத்தின் போது ஜன்தன் கணக்கில் போடப்பட்ட பணம் எவ்வளவு?

    டெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 2ம் ஆண்டு தினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது, துக்லக் ஆட்சியின் வெளிப்பாடு என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் புழக்கத்தில் இருந்த ரூ. 16.99 லட்சம் கோடி பணத்தை மதிப்பிழப்பதாக அறிவித்தார்.

    Congress urges Modi to apologise people on demonetisation

    இந்த சர்வாதிகார நடவடிக்கைக்கு 3 காரணங்களையும் பாஜக கூறியது கருப்புப்பணத்தை ஒழிப்பது, கள்ள நோட்டுகளை களையெடுப்பது மற்றும் தீவிரவாதிகளின் பணபரிவர்த்தனையை கட்டுப்படுத்துவது என்று சொல்லப்பட்டது. ஆனால் மோடியின் நடவடிக்கை 14வது நூற்றாண்டின் மன்னர் முகமது பின் துக்லகின் பணக்கொள்கையை போல தான் இருந்தது.

    உயர் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு... 2 ஆண்டில் செய்தது என்ன? உயர் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு... 2 ஆண்டில் செய்தது என்ன?

    2016ல் இந்தியாவில் அதிக பணப்புழக்கம் இருந்தது, 2018ல் நிலைமை மோசமாகத் தான் ஆகியுள்ளது. இதனை குறிக்கும் விதமாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மணிஷ் திவாரி தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட கட்சியின் அனைத்து பிரதிநிதிகளும் போராட்டங்களில் பங்கேற்பார்கள் என்றும் திவாரி கூறியுள்ளார்.

    English summary
    Congress spokesperson Manish Tewari says Prime minister Narendramodi have to apologize people for demonetisation, congress holds nationwide protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X