டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'வெறுப்பு பேச்சு' விவகாரம்.. காங். எடுத்த புதிய ஆயுதம்.. இந்திய பேஸ்புக் அதிகாரிகளுக்கு சிக்கல்

Google Oneindia Tamil News

டெல்லி: வெறுப்பு பேச்சு விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட இந்திய அதிகாரிகள் மீது பேஸ்புக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் தனது வெறுக்கத்தக்க பேச்சு விதிகளை ஆளும் பாஜகவுடன் தொடர்புடைய சில நபர்களுக்கும், குழுக்களுக்கும் ஆதரவாக பயன்படுத்தவில்லை என்று வால்ஸ்ட்ரீட் ஜானல் ஊடகம் அறிக்கை வெளியிட்டது.

இந்த விவகாரத்தில் இந்தியாவைச் சேர்ந்த பேஸ்புக் அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது. எனவே குறிப்பிட்ட இந்திய அதிகாரிகள் மீது பேஸ்புக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

கொழுந்தனுடன் கசமுசா.. புருஷனை அடித்து தூக்கில் தொங்க விட்ட கவுசல்யா.. புதுச்சேரியில் பகீர்!கொழுந்தனுடன் கசமுசா.. புருஷனை அடித்து தூக்கில் தொங்க விட்ட கவுசல்யா.. புதுச்சேரியில் பகீர்!

கம்யூனிஸ்ட் புதிய கோரிக்கை

கம்யூனிஸ்ட் புதிய கோரிக்கை

பேஸ்புக் வெறுப்பு பேச்சு விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டு குழு (ஜேபிசி) விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்துள்ளது. அக்கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இது பற்றி கருத்து தெரிவிக்கையில், பேஸ்புக் நிறுவனம், அரசாங்கத்தின் துறைகளுடனோ அல்லது தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்புகளுடனோ இணைந்து செயல்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறினார்.

சீர்குலைத்துவிடும்

சீர்குலைத்துவிடும்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரினேட் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், வெறுப்பு பேச்சு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுககுழு விசாரணைக்கு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம், ஏனென்றால் நமது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் மற்றும் நமது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கையையும் பொறுத்துக் கொள்ள முடியாது.

ஆழமாக ஆராய வேண்டும்

ஆழமாக ஆராய வேண்டும்

பேஸ்புக் உலகம், அதன் இந்தியா நடவடிக்கைகளில் உள்ள முரண்பாடுகளை ஆராயும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பேஸ்புக் இந்த விஷயத்தில் உடனடி தீர்வு நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், " இவ்வாறு கூறினார். சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க பேச்சுக்களின் அச்சுறுத்தல் குறித்து ஆழமாக ஆராய வேண்டிய அவசியம் இருப்பதாக காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தின.

Recommended Video

    BJP- க்கு ஆதரவு.. Facebook மீது குவியும் விமர்சனங்கள்
    சுப்ரியா வைத்த கோரிக்கை

    சுப்ரியா வைத்த கோரிக்கை

    காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரினே மேலும் கூறும் போது, " சமூக ஊடகத்தில் இருக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுகள் தீர்க்கமாக தீர்க்கப்பட வேண்டும். சதி கோட்பாடுகளை பரப்பும் பல்வேறு குழுக்களை நீக்கி அதனை தெரிவிக்க வேண்டும். " என்றார்.

    English summary
    Hate speech row: Congress wants Facebook to take action against its India executives
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X