டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா 2ம் அலை டேட்டாவில் குளறுபடி? நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ரிப்போர்ட்.. காங். குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மற்றும் மரணங்கள் தொடர்பான டேட்டாக்களில் குளறுபடி செய்யப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தி குறித்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் இரண்டாம் அலையின் போது அதிக அளவில் கொரோனா கேஸ்கள் பதிவானது. தற்போது வரை 3,33,82,690 பேர் இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 3,34,281 ஆக்டிவ் நோயாளிகளாக இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் தினசரி கேஸ்கள் 30 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது.

இந்தியாவில் இதுவரை 3,25,91,196 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். 4,44,288 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்தியாவில் இன்னும் மூன்றாம் அலை அதிகாரபூர்வமாக தொடங்கவில்லை.

 கொரோனா காலத்தில் குறைந்த பொருளாதார குற்றங்கள்.. 2020ல் 12 சதவீதம் சரிவு- குற்ற ஆவண காப்பகம் கொரோனா காலத்தில் குறைந்த பொருளாதார குற்றங்கள்.. 2020ல் 12 சதவீதம் சரிவு- குற்ற ஆவண காப்பகம்

ரிப்போர்ட்

ரிப்போர்ட்

இந்த நிலையில் இந்தியாவில் இரண்டாம் அலை கேஸ்கள் மற்றும் மரணங்களில் குளறுபடி நடந்து இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் கொள்கை மற்றும் அரசின் மதிப்பை காக்க வேண்டும் என்பதற்காக இந்த எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டு இருப்பதாகவும், இரண்டாம் அலை குறித்த எச்சரிக்கையை ஐசிஎம்ஆர் சரியான நேரத்தில் வெளியிடவில்லை. இது குறித்து முன்பே தெரிந்தும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் மறுப்பு

ஐசிஎம்ஆர் மறுப்பு

ஆனால் ஐசிஎம்ஆர் தரப்பு இது தொடர்பான தகவல்கள் அனைத்தையும் மறுத்துள்ளது. டேட்டாவில் எந்தவிதமான குளறுபடிகளும் நடக்கவில்லை. மாநில அரசுகள் கொடுக்கும் கொரோனா எண்ணிக்கை, பலி எண்ணிக்கை ஆகியவற்றைதான் நாங்கள் அப்டேட் செய்கிறோம். இதில் மத்திய அரசோ, ஐசிஎம்ஆர் தரப்போ குளறுபடி செய்ய வாய்ப்பே இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 காங்கிரஸ் கோரிக்கை

காங்கிரஸ் கோரிக்கை

இதில் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் மோடி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மற்றும் ஐசிஎம்ஆர் நிர்வாகிகள் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் அளித்துள்ள பேட்டியில், இது பிரதமர் மோடி மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும்.

4 லட்சம்

4 லட்சம்

உண்மையான பலி எண்ணிக்கை 4 லட்சத்தை விட அதிகமாக இருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உண்மையான பலி எண்ணிக்கை 68 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது சாதாரண விஷயம் கிடையாது. ஐசிஎம்ஆரில் இருந்த சில நிர்வாகிகளே வெளியே வந்து இந்த முறைகேடு குறித்து வெளிப்படையாக பேசி உள்ளனர். ஐசிஎம்ஆரில் இருந்த முன்னாள் நிர்வாகி அனுப் அகர்வால் இரண்டாம் அலையில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி உள்ளார்.

இந்தியா

இந்தியா

இந்தியாவை விட்டும் இவர் வெளியேறிவிட்டார். இதனால்தான் இதை பற்றி விரிவாக விசாரிக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு இரண்டாம் அலை குறித்த எச்சரிக்கை சரியான நேரத்தில் விடுக்கப்படவில்லை. இதனால் மாநில அரசுகள் கொரோனா இரண்டாம் அலைக்கு தயாராக முடியவில்லை. இதனால்தான் நாடு முழுக்க 68 லட்சம் பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று ரிப்போர்ட் தெரிவிக்கிறது என்று அஜய் மக்கான் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

    Tamilnadu vaccinated 21 lakhs people! Milestone in Mega Drive | OneIndia Tamil
    மத்திய அரசு மறுப்பு

    மத்திய அரசு மறுப்பு

    இதற்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மறுப்பு தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் விதிக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்றியே கொரோனா எண்ணிக்கை, மரணங்களை பதிவு செய்து வந்தோம். மாநில அரசுகளுக்கு இதில் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. செய்தியாளர்கள் சுதந்திரமாக செயல்பட்டார்கள். மக்களை திசை திருப்ப வேண்டும், பதற்றத்திற்கு உள்ளாக்க வேண்டும் என்று இப்படி செய்கிறார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    Congress wants a judicial investigation on Indias Covid 19 fudged data allegation by New York Times during 2nd wave.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X