டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளைக்கு பாருங்க… யாரு.. எங்கேன்னு சொல்லிடுவோம்… வேட்பாளர் பட்டியல் குறித்து கே.எஸ். அழகிரி பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி:லோக்சபா தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-2, விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, மதிமுகவுக்கு ஒரு தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1, கொமதேக 1, ஐஜேகே 1 தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரியய்யா, சின்னய்யா..! சத்தியமா நான் சொல்லல.. தருமபுரி கூட்டத்தில் பாமகவை கழுவி ஊற்றிய ஸ்டாலின் பெரியய்யா, சின்னய்யா..! சத்தியமா நான் சொல்லல.. தருமபுரி கூட்டத்தில் பாமகவை கழுவி ஊற்றிய ஸ்டாலின்

திமுக வாக்கு சேகரிப்பு

திமுக வாக்கு சேகரிப்பு

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்களை அறிவித்தும், தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக இறங்கி உள்ளது.

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

திமுகவை போல... அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தையும் வடிவமைத்து உள்ளன. ஆனால்... காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வில்லை.

முக்கிய ஆலோசனை

முக்கிய ஆலோசனை

இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை நடத்தியது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

காங். அறிவிப்பு

காங். அறிவிப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:தேர்தலில் வேட்பாளர்கள் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றது. மீண்டும் இந்த குழு நாளை கூடுகிறது. அப்போது, தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் என்பது அறிவிக்கப்படும் என்றார்.

English summary
Congress will announce their lok sabha candidates tomorrow says Tamilnadu Congress Committee president K.S. Alagiri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X