டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்.. காங்கிரஸ் செயற்குழு அதிரடி தீர்மானம்

Google Oneindia Tamil News

டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று, சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள், ஏ.கே.அந்தோணி, மல்லிகார்ஜுன கார்கே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

Congress Working Committe demands that the Citizenship Amendment Act should be withdrawn

இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான ஆனந்த் ஷர்மா கூறியதாவது:

குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

சிறந்த கல்வி நிறுவனம்.. ஐஐடி சென்னைக்கு முதலிடம்சிறந்த கல்வி நிறுவனம்.. ஐஐடி சென்னைக்கு முதலிடம்

காங்கிரஸ் கட்சி செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், மாநில அரசாங்கங்களின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாகவும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் குரல் நசுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், பெரிய போராட்டத்தை பார்த்துக்கொண்டு இருக்கின்றன. அந்த இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்று அந்த தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, நமது தீவிரமான போராட்டங்களுக்கு நடுவேயும் குடியுரிமை சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பிரச்சனை. நாட்டு மக்களைப் பிரித்தாள கூடிய ஒரு மோசமான சட்டம் இது. இந்த சட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பது ஒவ்வொரு தேசப்பற்று கொண்ட, சகிப்புத்தன்மை கொண்ட, மதசார்பற்ற இந்தியர்களுக்கும், தெளிவாக தெரியும். அந்த சட்டத்தின் நோக்கம் என்பது, இந்த நாட்டு மக்களை மொழி ரீதியாக பிரித்தாள வேண்டும் என்பது மட்டுமே.

சமத்துவம் வேண்டுமென்று போராடக்கூடிய இந்த நாட்டின் மக்களுடன், காங்கிரஸ் தொண்டர்கள், தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

English summary
Congress' Anand Sharma after Congress Working Committe (CWC) meeting: CWC demands that the Citizenship Amendment Act should be withdrawn and the process of National Population Register be stopped forthwith.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X