டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவிப்பு.. காரிய கமிட்டி கூட்டத்தில் பரபரப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா?

    டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

    17வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.

    இந்த செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே பஞ்சாப் மாநில முதல்வர் அமிரீந்தர் சிங், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

    ராகுல் ராஜினாமா அறிவிப்பு

    ராகுல் ராஜினாமா அறிவிப்பு

    மத்திய பிரதேச முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கமல்நாத் இந்த கூட்டத்தில பங்கேற்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

    ராஜினாமாவை ஏற்க மறுப்பு

    ராஜினாமாவை ஏற்க மறுப்பு

    இதற்கான கடிதத்தையும் ராகுல் காந்தி காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவிடம் அளித்துள்ளார். ஆனால் ராகுல்காந்தியின் ராஜினாமா கடிதத்தை ஏற்க காரிய கமிட்டி உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர்.

    கூட்டத்தில் பரபரப்பு

    கூட்டத்தில் பரபரப்பு

    மேலும் ராகுல்காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதால் காரிய கமிட்டி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    செய்தியாளர்கள் கேள்வி

    செய்தியாளர்கள் கேள்வி

    நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கடந்த 23 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல்காந்தி. அப்போது தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அன்றே ராஜினாமா கடிதம்

    அதற்கு பதிலளித்த ராகுல், பதவி விலகல் குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி முடிவு செய்யும் என்றார். அன்றிரவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியிடம் ராகுல்காந்தி ராஜினாமா கடிதம் கொடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த சோனியா காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Congress working committee meeting will be conducted in Delhi today. Congress chairperson Sonia will important decision in the party today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X