டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராகுல் விலகி 50 நாட்களாச்சு.. இன்னும் ஒரு தலைவரும் கிடைக்கலையா.. காங்கிரஸுக்கு இப்படி ஒரு சோதனையா

Google Oneindia Tamil News

Recommended Video

    Rahul gandhi resigns: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகி 50 நாட்களாகி விட்டன. ஆனால் இன்னும் அவருக்குப் பதில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் தவித்து வருகிறது அக்கட்சி.

    நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. நாட்டிலேயே மூத்த கட்சி காங்கிரஸ், நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்க பாடுபட்ட கட்சி காங்கிரஸ். அப்படிப்பட்ட கட்சிக்கு தலைவர் இல்லாமல் இருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. வினோதமாகவும் இருக்கிறது.

    லோக்சபா தேர்தல் பெரும் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கூறி விட்டார் ராகுல் காந்தி. தனது முடிவில் மாற்றம் இல்லை என்றும் அவர் கூறி விட்டார். இந்த நிலையில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது. ஆனால் கிட்டத்தட்ட 50 நாட்களாகியும் இன்னும் தலைவரைத் தேர்ந்தெடுக்காமல் உள்ளது காங்கிரஸ்.

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சந்திராயன் 2.. எப்போ விண்ணில் பாயும்? திடீர் தொழில்நுட்ப கோளாறு.. கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சந்திராயன் 2.. எப்போ விண்ணில் பாயும்?

    குழப்பத்தில் காங்கிரஸ்

    குழப்பத்தில் காங்கிரஸ்

    வயநாடு எம்பியாக உள்ள ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தலைவர் பதவியை நீக்கி விட்டார். தலைவர் பதவிக்குரிய பொறுப்புகளிலிருந்து அவர் முழுமையாக ஒதுங்கியிருக்கிறார். அதிகாரப்பூர்வ தலைவர் இல்லாத நிலையில் காங்கிரஸ் உள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் உதவியுடன் நடைபெறும் ஆட்சிக்கு சிக்கல் வந்துள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக தன் பக்கம் இழுத்து வருகிறது. பஞ்சாபில் சித்து அப்செட்டாகியுள்ளார்.

    கர்நாடக கலாட்டா

    கர்நாடக கலாட்டா

    கோவாவில் காங்கிரஸ் காலியாகி விட்டது. பாஜக தன் பக்கம் இழுத்து அமைச்சர் பதவியையும் கொடுத்துக் கூட்டிக் கொண்டு போய் விட்டது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் காங்கிரஸ் தலைமையோ, தலைவரை நியமிக்காமல் உட்கார்ந்திருக்கிறது. இது தொண்டர்களை மேலும் சோர்வடையவே செய்யும்.

    யார் தலைவர்

    யார் தலைவர்

    அடுத்த காங்கிரஸ் தலைவர் என்பதை இன்னும் மூத்த தலைவர்கள் முடிவு செய்யாமல் உள்ளனர். முடிவு செய்வதில் பெரும் குழப்பம் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மூத்த தலைவரை நியமிப்பதா அல்லது இளம் தலைவரை நியமிப்பதா என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. நாடு முழுமையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய முகமாக இருக்க வேண்டும் என்பதும் காங்கிரஸ் தலைமை முன்பு உள்ள பெரும் சவாலாக உள்ளது.

    எப்ப சரியாகும்

    எப்ப சரியாகும்

    தற்போது கர்நாடகாவில் நிலவும் குழப்பத்தை சரி செய்யும் பொறுப்பு கே.சி.வேணுகோபாலிடம் தரப்பட்டுள்ளது. அவர் பெங்களூரில் உட்கார்ந்து பிரச்சினை சரி செய்ய முயன்று வருகிறார். கர்நாடக குழப்பம் தீர்ந்த பிறகே புதிய தலைவர் நியமனத்தில் காங்கிரஸ் தீவிரம் காட்டும் என்றும் பேச்சு அடிபடுகிறது.

    விரைவான நடவடிக்கை தேவை

    விரைவான நடவடிக்கை தேவை

    மகாராஷ்டிரா, சட்டிஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து தேர்தல் வரவுள்ளது. எனவே விரைவாக தலைவரை நியமித்து கட்சியை உயிர்ப்புடன் வைக்க கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சித் தொண்டர்கள் மத்தியில் அழுத்தமாக எழுந்துள்ளது.

    English summary
    Congress leadership is yet to find out its President to replace Rahul Gandhi even after he has quit the office 50 days back.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X