டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிவில் உடையில் ஜாமியா மாணவர்களை தாக்கியது ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி அல்ல- டெல்லி போலீஸ் விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களை சிவில் உடையில் தாக்க்கியது ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி அல்ல; போலீஸ் கான்ஸ்டபிள்தான் என டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தின் போது பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

Controversial Man in riot gear beating Jamia student not RSS volunteer: Delhi Police

மாணவர்கள் மிக கொடூரமாக தாக்கப்பட்டனர். டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சிகள் போர்ராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் போலீசாரிடையே ஒருநபர் சிவில் உடையில் இருப்பது சர்ச்சையானது. சிவில் உடையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த பரத் ஷர்மா என்றும் ஏபிவிபியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

குடியுரிமை சட்டம் விவகாரம்.. காங்கிரஸ்.. கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் மோடி ஓபன் சவால் குடியுரிமை சட்டம் விவகாரம்.. காங்கிரஸ்.. கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் மோடி ஓபன் சவால்

சர்ச்சைக்குரிய அந்த நபரின் புகைப்படம், அவர் மாணவர்களை தாக்கும் வீடியோ பதிவுகளும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு பெரும் விவாதப் பொருளானது. இந்நிலையில் சர்ச்சைக்குரிய நபர் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி அல்ல என்றும் தெற்கு டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள்தான் என்றும் டெல்லி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

English summary
Delhi Police has said that Controversial Man in riot gear beating Jamia student not RSS volunteer:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X