டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்துறை அமைச்சகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை சிக்கலில் மாட்டிவிட்ட ' சைடிஸ் வித் ' விஸ்கி' போட்டோ

Google Oneindia Tamil News

டெல்லி: உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் சைடிஸ்களுடன் விஸ்கில் பாட்டில் இருக்கும் படம் பதிவு செய்யப்பட்டதால் சர்ச்சையாகி இருக்கிறது.

உள்துறை அமைச்சகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை 2.79 லட்சம் பேர் ஃபாலோ அப் செய்து வருகின்றனர். இந்த பக்கத்தில் இன்று காலையில் மேற்கு வங்கத்தில் ஆம்பன் (அம்பன், உம்பன்) புயல் மீட்பு பணிகள் தொடர்பான படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தன.

Controversy erupts over Whisky Bottles Image on MHA Facebook page

இப்படங்களுடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட படம்தான் சர்ச்சைக்கு காரணம். இரு விஸ்கி பாட்டில்கள், சைடிஸ்களுடன் இருக்கும் ஒரு படமும் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

இது சுமார் 15 நிமிடங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்தது. இதனையடுத்து வழக்கம் போல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இத்தகைய படங்களைப் பொறுப்பில்லாமல் பதிவேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

அதேநேரத்தில் ரிலாக்ஸாக இருக்கத்தான் இந்த படம் போட்டிருக்காங்க என நெட்டிசன்கள் குசும்பு பதிவுகளையும் போட்டு தள்ளிவிட்டனர். பின்னர் காலையில் 9.32 மணிக்கு இந்த படம் நீக்கப்பட்டது.

ஆஹா.. சென்னையில் செம்ம மாற்றம்.. வேகமாக குறையும் கன்டெய்ன்மென்ட் ஜோன்கள்.. லிஸ்டை பாருங்கஆஹா.. சென்னையில் செம்ம மாற்றம்.. வேகமாக குறையும் கன்டெய்ன்மென்ட் ஜோன்கள்.. லிஸ்டை பாருங்க

அதற்குள் இது சமூக வலைதளங்களில் வைரலாகவும் ஷேர் செய்யப்பட்டுவிட்டது. இது தொடர்பாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், புதியதாக பணிக்கு சேர்ந்தவர்தான் இந்த படங்களை தவறுதலாக அப்லோடு செய்துவிட்டார்.

அவர்தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். 15 நிமிடத்திலேயே அந்த படத்தை நீக்கியும் விட்டோம் என கூறியுள்ளனர்.

English summary
A controversy erupted over Two bottles of whisky Pics with the Facebook page of India's Ministry of Home Affairs (MHA).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X